கல்யாணம் ஆகியும் பொண்ணு அடங்கலயே!.. குட்டி ஜாக்கெட்டில் மூடேத்தும் கீர்த்தி சுரேஷ்!...
Keerthi suresh: ரஜினி நடித்து 1981ம் வருடம் வெளிவந்த நெற்றிக்கண் படத்தில் நடித்த மேனகாவின் மகள்தான் இந்த கீர்த்தி சுரேஷ். பள்ளியில் படிக்கும்போதே சினிமாவில் நடிக்க வேண்டும் என ஆர்வம் கொண்டார். சில மலையாள திரைப்படங்களில் குழந்தை நட்சத்திரமாகவும் நடித்தார். இது என்ன மாயம் என்கிற படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானார்.
சிவகார்த்திகேயனுடன் ஜோடி போட்டு நடித்த ரஜினி முருகன், ரெமோ போன்ற திரைப்படங்களில் தமிழ் சினிமா ரசிகர்களிடம் அதிகம் பிரபலமானார். அப்படியே தெலுங்கு திரைப்படங்களிலும் நடிக்க துவங்கினார். ஒருகட்டத்தில் தமிழை விட தெலுங்கில் அதிகம் நடிக்க துவங்கினார். மகாநடி படத்திற்காக சிறந்த நடிகைக்கான தேசிய விருதும் வாங்கினார்.
இதைத்தொடர்ந்து பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல கதைகள் இவரை தேடி வந்தது. பென் குயின், சாணி காயிதம், அண்ணாத்த போன்ற படங்களில் நடித்தார். தெலுங்கிலும் அப்படி அவருக்கு பல கதைகள் கிடைத்தது. ஹிந்தியில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையும் இவருக்கு ஏற்பட்டிருக்கிறது.
இயக்குனர் அட்லி தயாரித்த பேபி ஜான் என்கிற படம் மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளது. இது தமிழில் விஜய் நடித்து வெளியான தெறி படத்தின் ஹிந்தி ரீமேக் ஆகும். ஆனால், இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. எனவே, கீர்த்திக்கு பாலிவுட்டில் தொடர் வாய்ப்புகள் கிடைக்குமா என தெரியவில்லை.
ஒருபக்கம், தனது நீண்டநாள் காதலர் ஆண்டனியை சில மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னரும் கவர்ச்சி உடைகளை அணிந்து விழாக்களில் கலந்து கொண்டு வருகிறார். மேலும், அவ்வப்போது போட்டோஷுட் நடத்தியும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அவரின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.