டிரெஸ் போட்ருக்கேனா கண்டுபிடிங்க!.. ரசிகர்களுக்கு டெஸ்ட் வைத்த ராஷ்மிகா!.. போட்டோ பாருங்க!..

By :  Murugan
Update: 2025-01-25 13:09 GMT

Rashmika Mandana: கர்நாடகா சொந்த மாநிலம் என்பதால் துவக்கத்தில் சில கன்னட படங்களில் நடித்துவிட்டு அதன்பின் தெலுங்கு சினிமாவுக்கு போனவர் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் திரைப்படம் இவரை டோலிவுட்டில் மட்டுமின்றி கோலிவுட் ரசிகர்களிடமும் பிரபலமாக்கியது. தெலுங்கில் முன்னணி இளம் நடிகர்களுடன் நடித்து நம்பர் ஒன் இடத்தை பிடித்தார்.


சுல்தான் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிக்க துவங்கினார். இவர் விஜயின் தீவிர ரசிகை. கில்லி படம் பார்த்தது முதலே அவரை நேரில் ஒருநாள் சந்திக்கவேண்டும் என ஆசைப்பட்டவர் இவர். அப்படிப்பட்டவருக்கு வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.


அல்லு அர்ஜூனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வெளியான புஷ்பா திரைப்படம் வரவேற்பை பெற்றதையடுத்து புஷ்பா 2 படம் அதிக பட்ஜெட்டில் உருவானது. இந்த படம் 1800 கோடி வரை வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை பெற்றது. அதோடு, இந்த படம் மூலம் இந்திய அளவில் பெரிய நடிகையாக ராஷ்மிகா மாறியிருக்கிறார்.


கடந்த சில வருடங்களாகவே ஹிந்தி படங்களில் நடிக்க துவங்கிவிட்டார். ரன்வீர் கபூருக்கு ஜோடியாக நடித்த அனிமல் படத்தில் லிப்லாக் முத்தக்காட்சிகளில் நடித்து அதிர வைத்தார். இப்போது மேலும் சில ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். அதில் சவா என்கிற சரித்திர படத்தில் சத்ரபதி வீரசிவாஜியின் மனைவியாக நடித்திருக்கிறார்.


ஒருபக்கம், கிளுகிளுப்பான டிரெஸ்களை அணிந்து விதவிதமாக அழகை காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார். இந்நிலையில், ஆடை அணிந்திருக்கிறாரா இல்லையா என கண்டுபிடிக்க முடியாத படி டிரெஸ் போட்டு போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சொக்க வைத்திருக்கிறார்.



 


Tags:    

Similar News