எல்லா ஆங்கிளுமே தரமா இருக்கு!.. ராவா காட்டி ரசிகர்களை இழுக்கும் ராஷ்மிகா!..
Rashika Mandana: ராஷ்மிகா மந்தனாவின் சொந்த மாநிலம் கர்நாடகா. எனவே, துவக்கத்தில் சில கன்னட படங்களில் நடித்துவிட்டு பின்னர் தெலுங்கு சினிமா பக்கம் வந்தார். கன்னடத்தில் பிடிக்க முடியாத இடத்தை தெலுங்கில் பிடித்தார் ராஷ்மிகா. அங்குள்ள முன்னணி இளம் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்து அங்கு மார்க்கெட்டை பிடித்தார்.
விஜய தேவரகொண்டாவுடன் இவர் நடித்து வெளியான கீதா கோவிந்தம் திரைப்படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. இந்த படம் ராஷ்மிகாவை தமிழ்நாட்டிலும் பிரபலப்படுத்தியது. விஜய தேவரகொண்டாவுடன் தொடர்ந்து சில படங்களில் நடித்தார். மேலும், மகேஷ் பாபு உள்ளிட்ட பலருடனும் நடித்தார்.
கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் திரைப்படம் மூலம் தமிழில் நடிக்க துவங்கினார். இந்த படம் தெலுங்கிலும் டப் செய்யப்பட்டு வெளியானது. அதன்பின் சில வருடங்கள் கழித்து விஜய் நடித்த வாரிசு படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படத்தில் விஜயும், ரஷ்மிகாவும் சேர்ந்து போட்ட குத்தாட்டம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.
அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்து வெளியான புஷ்பா படம் ஹிந்தியிலும் ஹிட் அடிக்க அவருக்கு ஹிந்தி பட வாய்ப்புகள் வந்தது. அனிலம் படத்தில் ரன்பீர் கபூருக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் முத்தக்காட்சிகளிலும் அசத்தலாக நடித்து அதிர வைத்தார்.
ராஷ்மிகா நடித்து சமீபத்தில் வெளியான புஷ்பா 2 படமும் சூப்பர் ஹிட் அடித்து 1000 கோடியை வசூல் செய்து சாதனை படைத்திருக்கிறது. ஒருபக்கம், தெலுங்கு நடிகர் விஜய தேவரகொண்டாவை ராஷ்மிகா காதலித்து வருகிறார் விரைவில் அவரை திருமணம் செய்து கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ராஷ்மிகாவின் புதிய புகைப்படங்கள் லைக்ஸ்களை பெற்று வருகிறது.