தமிழ்ல பேசு மயிரில் பேசு.... அதுப்பில் ஆடும் அக்ஷராவின் குறும்படம்!
#EvictAkshara கொந்தளித்த நெட்டிசன்ஸ் - அக்ஷராவிற்கு குவியும் எதிர்ப்புகள்!
பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சி ஆரம்பத்தில் உப்பு சப்பில்லாமல் போனாலும் கூட பிரியங்கா ராஜுவின் காமெடி கொஞ்சம் ஸ்வாரஸ்யமாக கொண்டு சென்றது. அதன் பிறகு இந்த நிகழ்ச்சியில் காதல், ரொமான்ஸிற்கு வழியில்லாதது நிகழ்ச்சியை பெரிதாக மக்களை கவரவில்லை என பேசப்பட்டது.
இருந்தாலும் அதையெல்லாம் கடந்து தாமரையின் சண்டை, வாக்குவாதம், பின்னர் சமாதானம் என ஓரளவிற்கு ஓகேவாக ஓடிக்கொண்டிருந்த பிக்பாஸ் தற்போது டாஸ்க்குகள் கடுமையாக்கப்பட்டு போட்டியாளர்களின் ஆக்ரோஷமான முகங்களை வெளிக்கொண்டு வந்துள்ளார் பிக்பாஸ்.
நேற்று எலிமினேஷனில் இருந்து தப்பிப்பதற்கான டாஸ்க் ஒன்று கொடுக்கப்பட்டது. இதில் அபினை, தாமரை , அக்ஷர ஆகியோர் பங்கேற்றனர். இந்த டாஸ்கின் போது அக்ஷரா மற்றும் ராஜு இருவருக்கும் கொஞ்சம் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது அக்ஷரா மூச்சு விடாமல் ஆங்கிலத்தில் பேசி சண்டை போட உடனே பிரியங்கா தமிழில் பேசுங்க என்று மரியாதையோடு தான் கூறினார்.
இதையும் படியுங்கள்: இதே பொழப்பு தானா உங்களுக்கு? கழட்டிவிட்டு உணர்ச்சி தூண்டும் ஷிவானி!
இதை கேட்டதும் செம கடுப்பான அக்ஷரா பிரியங்காவை பார்த்து "நீ கொஞ்சம் சும்மா இரும்மா தமிழ்ல பேசு மயிரில் பேசு" என்று என கோபமாக பேசியது குறும்படமாக வெளியாகி சமூகவலைத்தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையாக வெடித்துள்ளது. இதையடுத்து நெட்டிசன்ஸ் #EvictAkshara என்ற ஹேஷ் டேக்கை போட்டு அவரை வெளியேற்றுங்கள் என கொந்தளித்து வருகின்றனர்.
வீடியோ லிங்க்:https://publish.twitter.com/?query=https://twitter.com/_Neelambari/status/1471255706913308675&widget=Tweet