பிரச்சினை இதுதான்! மகாலட்சுமி பிரிவு குறித்து ஃபேட்மேன் ரவி ஓப்பன் டாக்
சின்னத்திரை நடிகை மகாலட்சுமி பிரபல தயாரிப்பாளரான ரவீந்திரனை கடந்தாண்டு காதலித்து திருமணம் செய்தார். திருமணமான புதிதில் இவர்களின் திருமண செய்தி அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. பல மீடியாக்கள் இவர்களை பின் தொடர்ந்தே வந்தன. அதுவும் போக இந்த தம்பதியினரும் சளிக்காமல் மாறி மாறி அத்தனை ஊடகங்களுக்கும் பேட்டி கொடுத்து வந்தனர்.
இப்படி பல நாள்களாக இந்த தம்பதியினர் டிரெண்டிங்கிலேயே இருந்து வந்தனர். அதன் பிறகு மகாலட்சுமி சீரியலில் கவனம் செலுத்த சென்று விட்டார். அதுவரை இன்ஸ்டா, ட்விட்டர் என இருவரும் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் , வீடியோக்கள் என இணையத்தை ஆக்கிரமித்து வந்தன. ஆனால் சமீபகாலமாக இருவருமே சோலோவாக இருக்கும் புகைப்படத்தை தான் வெளியிட்டு வருகிறார்கள்.
இதை கண்ட ஊடகங்கள் இருவருக்கும் ஏதோ பிரச்சினை என்று எழுதி வருகின்றனர். இவர்களுக்கு பதில் கொடுக்கும் வகையில் ரவீந்திரன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதாவது சோலோவாக புகைப்படம் போஸ்ட் பண்ணது தப்பா? அவளும் தான் இன்ஸ்டாவில் விதவிதமா போஸ்ட் போடுறா, அவள கேட்க மாட்டீங்க, என்கிட்டதான் கேட்கிங்க என்று மிகவும் ஜாலியாக பேசினார். மேலும் திருமணத்திற்கு முன்பை விட இப்போதுதான் மிக சந்தோஷமாக இருக்கிறேன் என்றும் கூறினார்.
அதுமட்டுமில்லாமல் அவள் மீடியாவிலேயே இருந்தவள், அதனால் சூட்டிங் முடிந்து லேட்டா வருவாள், ஒரு சாதாரண குடும்பத்தில் இருக்கும் ஒரு பையனின் தாய் நினைப்பது ‘ஹோட்டலிலேயே சாப்பிடுவான் என நினைத்துதானே கட்டிவச்சோம், இப்பவும் ஹோட்டலிலேயே சாப்பிட்டால் எப்படி’ என்றுதான் தோன்றும். ஆனால் மகாலட்சுமி அதற்கு நேர்மாறாக எத்தனை மணியானாலும் வந்து எனக்காக சமைத்துக் கொடுப்பாள் என்று கூறினார்.
அதையும் மீறி பிரச்சினை வந்தாலும் அப்போ நடிப்பதை நிறுத்திக் கொள்ளட்டுமா? என்று கேட்பாராம் மகாலட்சுமி. மேலும் என் அம்மாவிடம் இருந்து மகாலட்சுமி மீது ஏராளமான வருத்தங்கள் வந்தாலும் மகாலட்சுமி இதுவரை என் அம்மாவை பற்றி எதுவுமே சொன்னதில்லை என்று கூறினார். ஆனால் திருமணத்தில் நாங்கள் டிரெண்டானவதை விட பிரிகிறோம் என்ற செய்தியால்தான் அதிகமாக டிரெண்டிங்காகி இருக்கிறோம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க :சின்னத்திரையின் ரம்யா கிருஷ்ணன்! இவருக்கு இப்படி ஒரு நிலைமையா? எமோஷனாகி அழுத டிஆர்