ரொமான்ஸ் வராதுன்னு கிண்டலடித்த சினிமா உலகம்!.. அந்த படத்தில் புகுந்து விளையாடிய எம்.ஜி.ஆர்..

தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர் அடைந்த உச்சத்தை எந்த ஒரு நடிகரும் பெற்றிருக்க மாட்டார் என அடித்து சொல்லலாம். சிறு வயது முதலே நாடகங்களில் நடிக்க துவங்கி ஒரு கட்டத்தில் சினிமாவுக்கு வந்தவர் இவர். ராஜகுமாரி படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கிய எம்.ஜி.ஆர் அதன்பின் பல திரைப்படங்களிலும் நடித்தார். துவக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்தது எல்லாமே சரித்திர படங்கள்தான். அந்த எல்லா படங்களிலும் சண்டைக் காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருக்கும். குறிப்பாக எம்.ஜி.ஆரின் கத்தி மற்றும் வாள் சண்டை […]

Update: 2024-06-21 23:27 GMT

தமிழ் திரையுலகில் எம்.ஜி.ஆர் அடைந்த உச்சத்தை எந்த ஒரு நடிகரும் பெற்றிருக்க மாட்டார் என அடித்து சொல்லலாம். சிறு வயது முதலே நாடகங்களில் நடிக்க துவங்கி ஒரு கட்டத்தில் சினிமாவுக்கு வந்தவர் இவர். ராஜகுமாரி படம் மூலம் ஹீரோவாக நடிக்க துவங்கிய எம்.ஜி.ஆர் அதன்பின் பல திரைப்படங்களிலும் நடித்தார்.

துவக்கத்தில் எம்.ஜி.ஆர் நடித்தது எல்லாமே சரித்திர படங்கள்தான். அந்த எல்லா படங்களிலும் சண்டைக் காட்சிகள் அதிகம் இடம் பெற்றிருக்கும். குறிப்பாக எம்.ஜி.ஆரின் கத்தி மற்றும் வாள் சண்டை அனல் பறக்கும். எம்.ஜி.ஆருக்கு அது நன்றாக தெரியும் என்பதால் அந்த காட்சிகளில் சிறப்பாக நடிப்பார்.

இதையும் படிங்க: எம்.ஜி.ஆர் படத்தில் டி.எம்.எஸ் பாட துவங்கியது இப்படித்தான்… செம பிளாஷ்பேக்..

எனவே, ஒரு ஆக்சன் ஹீரோவாகவே அவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். ஜனரஞ்சக படங்களில் நடிக்க துவங்கியபோது கத்தி சண்டை போட முடியவில்லை என்றாலும் சண்டை காட்சிகளில் தூள் கிளப்பினார். சிவாஜி என்றால் நடிப்பு.. எம்.ஜி.ஆர் என்றால் சண்டை என மாறிவிட்டது.

ஒருகட்டத்தில் எம்.ஜி.ஆர் ஒரு ஸ்டண்ட் நடிகர் மட்டுமே. அவருக்கு காதல் காட்சிகளில் நடிக்கவே வராது. அவரே முயற்சி செய்தாலும் அது முடியாது என திரையுலகை சேர்ந்த சிலரே பேச துவங்கினார். இது எம்.ஜி.ஆரின் காதுகளுக்கும் எட்டியது. அந்த இமேஜை மாற்ற வேண்டும் என நினைத்தார்.

காதல் காட்சிகளில் மிகவும் நெருங்கி நடிக்கக் கூடாது. இது ரசிகர்களுக்கு அருவருப்பை ஏற்படுத்தும் என்பது எம்.ஜி.ஆரின் எண்ணன். ஆனால், அது போன்ற காட்சிகளில் நடித்து காதல் மன்னன் என்கிற பட்டத்தை வாங்கி இருந்தார் ஜெமினி கணேசன். அப்போதுதான், தேவர் பிலிம்ஸ் தயாரிப்பில் வேட்டைக்காரன் படத்தில் நடிக்க துவங்கினார் எம்.ஜி.ஆர்.

அந்த படத்தில் ஒரு பாடல் காட்சியில் சாவித்ரியுடன் மிகவும் நெருக்கமாக நடித்த் அசத்தினார் எம்.ஜி.ஆர். ரொமான்ஸ் காட்சிகளில் எம்.ஜி.ஆர் பின்னி எடுத்ததை பார்த்து படப்பிடிப்பு குழுவினரே வாயடைத்து போனார்கள். அந்த படத்தோடு, எம்.ஜி.ஆக்கு ரொமான்ஸ் செட் ஆகாது என சொன்னவர்கள் வாயை மூடிக்கொண்டார்கள்.

Tags:    

Similar News