சும்மா கத்தாதீங்க.. பாலசந்தரையே எதிர்த்து பேசிய நடிகர்.. ரூமுக்கு அழைத்து என்ன செய்தார் தெரியுமா?
இயக்குனர் சிகரம்: தமிழ் சினிமாவில் இயக்குனர் சிகரமாக பல சிறந்த படைப்புகளை கொடுத்து இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்த இயக்குனர் பாலச்சந்தர். நாகேஷை முதன் முதலில் ஹீரோவாக்கி அழகுபார்த்தவர். எம்ஜிஆர் சிவாஜி காலத்திலேயே சினிமாவிற்குள் வந்து பல பெரிய ஆளுமைகளை இந்த சினிமாத்துறையில் அறிமுகம் செய்தவர். அவருக்கு என இப்போது வரை சினிமாவில் ஒரு தனி மரியாதை இருக்கத்தான் செய்கிறது.
பாலச்சந்தரையே எதிர்த்தவர்: தன்னுடைய படைப்புகளால் சினிமாவில் ஒரு தனி ராஜ்ஜியமே நடத்தி வந்தார் கே.பாலச்சந்தர். அவரை கண்டால் ரஜினி , கமல் என பல நடிகர்களே பயந்து நடுங்குவார்கள். அவர் முன்னாடி நின்று பேசக் கூட தயங்குவார்கள். அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு கேரக்டர் ஆர்ட்டிஸ்ட் பாலச்சந்தரை எதிர்த்து பேசி ஒரே களேபரமாக மாறிய சம்பவம் பற்றித்தான் இந்த செய்தியில் பார்க்க இருக்கிறோம். அவர் வேறு யாருமில்லை. பல படங்களில் குணச்சித்திர நடிகராக நடித்த அச்சமில்லை கோபிதான். இதோ அவர் கூறியது:
சும்மா கத்தாதீங்க: ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது எப்படி நடிக்கணும்னு தெரியல. அவருக்கு கோபம் வந்து கத்த ஆரம்பிச்சுட்டாரு. உடனே சும்மா கத்தாதீங்க எப்படி நடிக்கணும்னு சொல்லுங்க. அப்படி நடிச்சு காட்டுறேன்னு சொல்லிட்டேன். யாரை பாலச்சந்தர் சாரை. உடனே பாலச்சந்தர் ‘யார்ர என்ன.. என்ன நடிக்க சொல்றான் பாருய்யா இவன். நான் ஒன்னும் ஆர்ட்டிஸ்ட் இல்ல.’னு கத்தி கூச்சல் போட்டாராம். ஆனால் அவர் கத்தியது எனக்கு ஒன்னும் தோணல. ஆனால் அதன் பிறகு அவர் சரி பண்றேன் பாத்துக்கோனு நடிச்சு காண்பிச்சாரு.
ஏன் கழுத்த அறுக்குற?: ஆனால் அவர் நடிச்சதுக்கு பிறகுதான் அவருக்குள்ள ஒரு நல்ல நடிகன் இருக்கிறான்னு தெரிஞ்சது. ஏனெனில் நிறைய நாடகங்களில் அவர் நடிச்சிருக்காரு. அதன் பிறகுதான் நான் பண்ணினது தவறுனு தெரிஞ்சது. ஐய்யயோ கடவுளே இப்படி பேசிட்டோமேனு நடிச்சு முடிச்சுட்டேன். உடனே பாலச்சந்தர் ‘இதானே! அவ்வளவுதான். நீதான் நல்ல நடிப்பீயே. ஏன் இப்படி கழுத்த அறுத்த?’னு மீண்டும் கத்த ஆரம்பிச்சுட்டாரு.
அவமானமா போயிடுச்சு: ஆனால் இதை நான் ரொம்ப சீரியஸாக எடுத்துக்கல. 10000 பேர் ஷூட்டிங் பார்த்துக்கிட்டு இருக்காங்க. நம்மல அவமானப்படுத்திட்டாங்களேனுதான் தோணுச்சு. எல்லாம் முடிச்சுட்டு என்னுடைய ரூமுக்கு வந்துட்டேன். வந்ததும் ஒரு 8 மணி இருக்கும். ஒரு கால் வந்துச்சு. பாலச்சந்தர் சார் உங்கள அவர் ரூமுக்கு வரச்சொன்னாருனு சொன்னாங்க. நானும் போனேன். ஆனால் பயத்துடன் தான் போனேன்.
வாடா.. உட்காருடானு சொன்னாரு. நானும் உட்கார்ந்தேன். ‘ஏன்டா.. உன்னை நான் இன்னிக்கு நிறைய திட்டிட்டேனோ? அப்படி பண்ணியிருக்கக் கூடாது. சாரிடா கோபி’னு பாலச்சந்தர் சொன்னதும் எனக்கு ஆச்சரியமாகிவிட்டது. எவ்வளவு பெரிய நடிகர்களை ரஜினி, கமல், பிரமிளா, ஜெயசுதா , ஜெயச்சித்ரானு ஏகப்பட்ட பெரிய ஆளுமைகளை உருவாக்கிய பாலச்சந்தர் என்னிடம் சாரி கேட்பாருனு நினைக்கவே இல்லை.
கடைசில கிண்டலாக ஒன்னு கேட்டாரு. ‘ஆமா.. எப்படி உனக்கு இவ்வளவு தைரியம் வந்துச்சு? என்கிட்ட எதிர்த்து பேச’னு கேட்டாரு. உடனே நான் ‘உங்கள டைரக்டரா பாக்கல. என்னுடைய மாமாவா சித்தப்பாவாத்தான் பார்த்தேன்’னு சொன்னதும் என்னை கட்டிப்பிடிச்சு அவருடைய அன்பை பரிமாறிக்கிட்டாரு என அச்சமில்லை கோபி அந்த பேட்டியில் கூறியிருந்தார்.