கேப்டனின் சின்னத்தில் நடிக்கவிருந்த விஜய்!. ஆனா கிரேட் எஸ்கேப்!. ஒரு பிளாஷ்பேக்!....

Actor Vijay: அப்பா எஸ்.ஏ.சந்திரசேகரால் சினிமாவுக்கு வந்தவர் நடிகர் விஜய். நாளைய தீர்ப்பு மூலம் நடிக்க துவங்கி அப்பாவின் இயக்கத்தில் மட்டுமே தொடர்ந்து நடித்து வந்தார். விக்ரமனின் இயக்கத்தில் நடித்த பூவே உனக்காக திரைப்படம் அவரை ரசிகர்களிடம் கொண்டு சேர்த்தது. இந்த படம் மூலம்தான் விஜய்க்கு பெண் ரசிகைகளே உருவானார்கள்.
அதன்பின் பல காதல் கதைகளில் நடித்து ஒரு கட்டத்தில் ஆக்சன் ஹீரோவாக மாறினார். காதல், ஆக்ஷன், மாஸ் என ரஜினியின் ரூட்டில் பயணித்து முன்னணி நடிகர்களில் முக்கியமானவராக மாறினார். விஜயின் கில்லி படம்தான் தமிழ் சினிமாவில் 50 கோடி வசூல் செய்த முதல் திரைப்படம்.
ஒருகட்டத்தில் ரஜினிக்கே டப் கொடுக்கும் நடிகராகவும் மாறினார். இப்போதுவரை வசூலில் விஜய்தான் நம்பர் ஒன் இடத்தில் இருக்கிறார். கெரியரின் உச்சத்தில் இருக்கும்போதே அரசியலுக்கும் போய்விட்டார். வருகிற 2026 சட்டமன்ற தேர்தலை அவர் குறி வைத்திருக்கிறார். ஏற்கனவே கட்சி மாநாட்டில் பரபரப்பாக அரசியல் பேசிய விஜய் நேற்று கட்சி துவங்கி 2வது ஆண்டு விழாவில் பேசியபோதும் பல விஷயங்களை பேசினார்.
எல்லோருக்கும் முன்பே அரசியலுக்கு வந்தவர் விஜயகாந்த். விஜயின் சினிமா வளர்ச்சிக்கு ஒரு முக்கிய காரணமாக இருந்தவர் இவர். விஜயை யாரும் கண்டுகொள்ளாத நிலையில் எஸ்.ஏ.சி இயக்கிய செந்தூரப்பாண்டி படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்து கொடுத்தார். இந்த படம்தான் விஜயை பட்டி தொட்டியெங்கும் கொண்டு சேர்த்தது.
விஜயகாந்துக்கு தேர்தல் ஆணையம் கொடுத்த சின்னம் முரசு. இந்த தலைப்பில் விஜய் ஒரு படத்தில் நடிக்கவிருந்தார் என்பது தெரியவந்திருக்கிறது. விஜயை வைத்து திருப்பாச்சி, சிவகாசி படங்களை இயக்கிய பேரரசு அப்படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால், ஒரே இயக்குனருடன் 3 படங்கள் வேண்டுமா என யோசித்த விஜய் அந்த படத்திலிருந்து விலகிவிட்டார்.
இல்லையெனில் முரசு என்கிற தலைப்பில் விஜய் படம் ஒன்று உருவாகியிருக்கும். சிவகாசி படத்திற்கு பின் விஜயை வைத்து படமெடுக்க பேரரசு பலமுறை முயன்றும் முடியவில்லை. அந்த கோபத்தில்தான் பரத்தை ஆக்ஷன் ஹீரோவாக மாற்றி, அவருக்கு சின்ன தளபதி என பட்டமெல்லாம் கொடுத்து அவரை மாஸ் ஹீரோவை போல பில்டப்பெல்லாம் செய்து பழனி என்கிற படத்தை எடுத்தார். இந்த படம்தான் பரத்தின் மார்க்கெட்டையே காலி செய்தது.