எம்ஜிஆர் பட சூட்டிங்கில் கும்பலா இறங்கிய ஒரு கூட்டம்! நடிகைகள் இருக்க சின்னவரு செய்த காரியம்
தமிழ் சினிமாவில் ஒரு உன்னதமான நடிகராக இருப்பவர் நடிகர் எம்ஜிஆர். புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், மக்கள் திலகம் என பல பேர்களால் அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். இன்று வரை அனைவரும் அவரை ஒரு தெய்வமாகவே மக்கள் போற்றி வருகின்றனர். ஏழைகளுக்கு உதவி செய்வதில் இருந்து மக்களுக்காகவே தன் வாழ்நாளை கழித்தார் எம்ஜிஆர்.
ஆரம்பத்தில் எம்ஜிஆரும் ஒரு துணை நடிகராகத்தான் அவருடைய சினிமா பயணத்தை ஆரம்பித்தார். சதிலீலாவதி திரைப்படம்தான் எம்ஜிஆர் நடித்த முதல் திரைப்படம். இவர் பெரும்பாலும் ஜெயலலிதா மற்றும் சரோஜாதேவி ஆகியோருடன்தான் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். எம்ஜிஆர் - சரோஜாதேவி ஜோடி என்றால் அது மக்களுக்கு பிடித்தமான ஜோடி.
இந்த நிலையில் எம்ஜிஆரை பற்றி நடிகை லட்சுமி ஒரு சுவாரஸ்ய தகவலை பகிர்ந்தார். இதயவீணை படத்திற்காக காஷ்மீரில் படப்பிடிப்பிற்காக எம்ஜிஆர் உட்பட அனைவரும் சென்றிருக்கின்றனர். அப்போது திடீரென எம்ஜிஆர் பைனாகுலரை எடுத்து தூரத்தில் இருந்ததை ரொம்ப நேரமாக பார்த்துக் கொண்டே இருந்தாராம். உடனே அங்கு இருந்த நடிகைகளை உடனே பேக்கப் செய்து அனுப்பும் படி சொல்லியிருக்கிறார் எம்ஜிஆர்.
அவர் சொன்னதும் அங்கு இருந்த அனைத்து நடிகைகளும் காரில் ஏறில் புறப்பட்டார்களாம். அப்போது ஒரு சிலர் அதில் லட்சுமி மற்றும் புளியூர் சரோஜா ஆகிய இருவரும் திரும்பி பார்த்திருக்கின்றனர். ஒரு ரவுடி கும்பல் படப்பிடிப்பில் இருந்த நடிகைகளை பார்த்ததும் இவர்களை கடத்துவதற்காகவோ அல்லது வேறு எதற்காகவோ வந்து கொண்டிருப்பதைத்தான் எம்ஜிஆர் பைனாகுலரை வைத்து பார்த்துக் கொண்டிருந்திருக்கிறார்.
உடனே அந்த கும்பல் உள்ளே வர படப்பிடிப்பில் இருந்த ஸ்டண்ட் கலைஞர்கள் அந்த கும்பலை அடித்து துவைத்திருக்கிறார்கள். அதில் எம்ஜிஆரும் உள்ளே இறங்கி அனைவரையும் அடித்து விரட்டிவிட்டாராம். உண்மையிலேயே ஒரு ஹீரோ சண்டை போட்டார் என்றால் அது எம்ஜிஆர் தான் என லட்சுமி ஒரு மேடையில் கூறினார்.