இதுவரை ரகசியம் காக்கப்படும் கமலின் படம்.. அதன் வெற்றிக்கு முக்கிய காரணமான நபர் யார் தெரியுமா?
கமல் ஒரு பொக்கிஷம்:
தமிழ் சினிமாவிற்கு கிடைத்த பொக்கிஷம் என்று சொல்லலாம் நடிகர் கமல்ஹாசன். குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த சினிமாவில் சர்வே செய்து வருகிறார். சினிமாவில் இருக்கும் அத்தனை நுணுக்கங்களையும் கற்றுத்தேர்ந்தவர் கமல். ஒரு என்சைக்ளோபீடியாவாக அனைவருக்கும் சினிமாவில் ஒரு நல்ல வழிகாட்டியாகவும் இருந்து வருகிறார்.
எப்படி ரஜினி, கமலுக்கு முந்தைய காலத்தில் சிவாஜியை நடிப்பிற்கு அடையாளமாக நாம் பார்த்து வந்தோமோ அதை போல் விஜய் அஜித் காலத்தில் கமலைத்தான் நடிப்பிற்கு உதாரணமாக கருதுகிறோம்.அவர் ஏற்று நடித்த அத்தனை கதாபாத்திரங்களுமே மக்களிடையே பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றன. குணா படத்தில் ஒரு மன நலம் பாதிக்கப்பட்ட கேரக்டராகட்டும், அபூர்வ சகோதரர்கள் படத்தில் அமைந்த அப்பு கேரக்டராகட்டும் இன்னும் எத்தனையோ கதாபாத்திரங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
மறைக்கப்பட்ட அப்பு ரகசியம்:
சினிமாவில் அடுத்து என்ன செய்யலாம்? சினிமாவை அடுத்த கட்ட லெவலுக்கு எப்படி கொண்டு போகலாம் என்பதையே தான் யோசிப்பவர் கமல். இவர் நடித்த படங்களில் இன்று வரை அனைவருக்கும் ஆச்சரியமூட்டும் திரைப்படமாக இருப்பது அபூர்வ சகோதரர்கள் திரைப்படம்தான். அதில் குள்ளமான கேரக்டரில் அப்புவாக கமல் எப்படி நடித்தார் என்பது இதுவரைக்கும் யாருக்கும் தெரியாது.
ஒரு நாள் அந்த ரகசியம் தெரியவரும் என கமல் இது நாள் வரை ரகசியம் காத்து வருகிறார். இந்த நிலையில் இப்போது பார்க்கிற அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் வேறு. முதலில் எடுக்கப்பட்ட அபூர்வ சகோதரர்கள் படம் வேறு என சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறினார். தொடக்கத்தில் கமல் திரைக்கதையில் ஒரு 10 நாள் சூட்டிங் நடைபெற்றிருக்கிறது. எடுக்கப்பட்ட வரை அந்தப் படத்தை பஞ்சு அருணாச்சலத்திடம் போட்டு காண்பித்திருக்கிறார்கள்.
ஆனால் திரைக்கதையில் சொதப்பல் இருக்க அந்தக் கதையை முற்றிலுமாக மாற்றி வேறொரு திரைக்கதையை அமைத்துக் கொடுத்திருக்கிறார் பஞ்சு அருணாச்சலம். அதுதான் இப்போது நாம் பார்க்கும் அபூர்வ சகோதரர்கள் திரைப்படம் என சித்ரா லட்சுமணன் கூறினார்.