அந்த ஒரு வரி எழுத மூணு மாசம் ஆச்சா? அதான் சூப்பர் ஹிட்.. ஏஆர் ரஹ்மான் பகிர்ந்த தகவல்
மறுமலர்ச்சி ஏற்படுத்திய ரஹ்மான்:என்னது இந்தப் பாடலின் முதல் வரியை எழுதுவதற்கு மூன்று மாதம் ஆச்சா ?ஏ ஆர் ரகுமான் சொன்ன சுவாரசிய தகவல். தற்போது ஏ ஆர் ரகுமான் இசையில் காதலிக்க நேரமில்லை திரைப்படம் பொங்கல் ரிலீஸ் ஆக வெளியாக இருக்கின்றது. அதனால் அந்த படத்தை பற்றியும் தன்னுடைய இசை அனுபவங்களை பற்றியும் சமீபத்திய பேட்டியில் ஏ ஆர் ரகுமான் பகிர்ந்திருக்கிறார்.
மாறுபட்ட இசை:ஒரு காலத்தில் எம் எஸ் விஸ்வநாதன், இளையராஜா என பெரிய பெரிய ஜாம்பவான்கள் இசையில் ஆளுமை படைத்த போது திடீரென முளைத்த ஒரு விதையாக ஏ ஆர் ரகுமான் தோன்றினார். அவருடைய வித்தியாசமான இசையில் இந்த தமிழ் சினிமா அடுத்த கட்ட நகர்வுக்கு பயணித்தது. அதிலும் குறிப்பாக மணிரத்னம், வைரமுத்து என முற்றிலும் மாறுபட்ட காம்போ. ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது.
புதுமையான அனுபவம்:அதிலிருந்து ஏ ஆர் ரகுமானின் இசை உலகம் முழுவதும் பரவ தொடங்கியது. அதுவரை இளையராஜாவின் இசையை கேட்டு வந்த ரசிகர்களுக்கு ஏ ஆர் ரகுமானின் வருகை ஒரு புது மாற்றத்தை கொடுத்தது. அதை இன்று வரை தக்கவைத்துக் கொண்டிருக்கிறார் ஏ ஆர் ரகுமான். தமிழ் மட்டுமல்ல ஹிந்தி, ஹாலிவுட் என உலக அரங்கில் பிரபலமாகி தன்னுடைய இசையை பரவச் செய்தவர் ரகுமான்.
முதன் முதலில் இரட்டை ஆஸ்கார் விருதுகளை வென்ற நாயகன் என்ற பெயருக்கும் சொந்தக்காரர் ஆனார். இந்த நிலையில் ஒரு பாடலைப் பற்றிய அனுபவத்தை பற்றி பேட்டியில் கூறி இருக்கிறார் ரஹ்மான். பிரபுதேவா நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த திரைப்படம் காதலன். அந்த படத்தில் அமைந்த ஊர்வசி ஊர்வசி என்ற அந்த ஒரு வரி எழுதுவதற்கு மூன்று மாதம் ஆனதாக சொல்லி இருக்கிறார் ரகுமான்.
சில சமயங்களில் ஒரு பாடலின் முதல் வரி செட் ஆவதற்கு சில நாட்கள் சில மாதங்கள் ஆகலாம். எத்தனையோ வரிகள் கிடைத்தாலும் இயக்குனருக்கு அது பிடிக்காமல் இருக்கும். தயாரிப்பாளருக்கு அது பிடிக்காமல் இருக்கும். அதனால் முதல் வரியை பிடிப்பதற்கு மிகவும் மெனக்கிட வேண்டி இருக்கும். அப்படித்தான் இந்த ஊர்வசி ஊர்வசி பாடலின் இந்த முதல் வரி செட் ஆவதற்கு மூன்று மாதங்கள் ஆனது எனக் கூறினார் ரகுமான். அந்த பாடல் பின்னாளில் எப்படிப்பட்ட வரவேற்பை பெற்றது என அனைவருக்கும் தெரியும். அந்த நேரத்தில் கல்லூரி இளைஞர்கள் அடிக்கடி கேட்கும் பாடலாக இந்த ஊர்வசி ஊர்வசி பாடல் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.