இளையராஜாகிட்ட வேலை செய்யும்போது செம சரக்கு!.. லீக் பண்ணிய ஏ.ஆர்.ரஹ்மான்..

By :  Murugan
Update: 2025-01-11 10:28 GMT

Ilayaraja: நாடகம், இசை, சினிமா போன்ற துறைகளில் இருக்கும் 90 சதவீத கலைஞர்களுக்கு மது, சிகரெட் போன்ற கெட்டப்பழக்கங்கள் இருக்கும். ஏனெனில், இது தொடர்பான வேலைகளை செய்தாலே அந்த பழக்கம் பலருக்கும் தானாகவே வந்துவிடும். மிகவும் அரிதாக சிலர் மட்டுமே இந்த துறையில் கெட்டப்பழக்கங்கள் இல்லாமல் இருப்பார்கள்.

குடிப்பழக்கம்: நடிகர்களில் சூர்யா, கார்த்தி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட சில நடிகர்களுக்கு மட்டுமே மது, சிகரெட் போன்ற பழக்கம் கிடையாது. வீட்டிலிருந்து ஷூட்டிங் நடக்கும் இடம். ஷூட்டிங் முடிந்ததும் நேராக வீடு என இருப்பார்கள் இவர்கள். இல்லையெனில், தங்களுக்கான அலுவலகத்தில் இருப்பார்கள்.

இவர்களை வேறு எந்த பார்ட்டியிலும் பார்க்க முடியாது. பொதுவாக திரைத்துறையை சேர்ந்த பலரும் ஒரு வெற்றியை பார்த்தாலோ அல்லது பிறந்தநாள், திருமணம் தொடர்பான நிகழ்ச்சி என்றாலோ பார்ட்டி கொடுப்பார்கள். அதில் பலரும் கலந்து கொண்டு மது அருந்துவார்கள். இது பல வருடங்களாக நடப்பதுதான். நடிகர் ரஜினிக்கு கூட பல வருடங்கள் மதுப்பழக்கம் இருந்தது.


ரஜினிகாந்த்: உடல்நிலை பாதிக்கப்பட்ட பின்னரே அந்த பழக்கதை அவர் விட்டார். மதுப்பழக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்கள் பலரும் திரைத்துறையில் இருக்கிறார்கள். ஆனால், அந்த பழக்கத்தை பலரும் பின்பற்றி வருகிறார்கள். இசையமைப்பாளர்களில் இளையராஜாவுக்கும், ஏ.ஆர்.ரஹ்மானுக்கும் எந்த கெட்டப்பழக்கமும் கிடையாது.

இருவருமே தங்களின் நேரங்களை இசையில் மட்டுமே செலவழிக்கிறார்கள். மனக்கட்டுப்பாடு இல்லை என்றால் கெட்டப்பழக்கம் வந்துவிடும் என சமீபத்தில் ஒரு பேட்டியில் ரஹ்மானே சொல்லியிருந்தார். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய ஏ.ஆர்.ரஹ்மான் ஒரு முக்கிய தகவலை பகிர்ந்துள்ளார்.

இளையராஜா: இளையராஜாவிடம் நான் வேலை செய்த போது என்னை சுற்றி இருந்த எல்லோருக்கும் மதுப்பழக்கம் இருந்தது. அவர்களை வீட்டுக்கு கொண்டு போய் விடவே ஒரு ஆள் தேவைப்படும். ஆனால், அப்படி இருந்த சூழ்நிலையை மாற்றி ஒட்டு மொத்த கலைக்கும் ஒரு மரியாதை கொண்டு வந்தர் இளையராஜா’ என பேசியிருக்கிறார்.

ஒருமுறை இளையராஜா குழுவில் இருந்த ஒருவர் மது அருந்துவிட்டு வந்ததால் கோபப்பட்ட இளையராஜா அவரை வெளியே அனுப்பிவிட்டு அந்த வேலையை ரஹ்மானுக்கு கொடுத்தார் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News