மூணு மாசம் அக்ரிமெண்டில் எம்ஜிஆர் படத்தில் ஒப்பந்தமான சந்திரபாபு.. ஆனால் நடந்தது என்ன தெரியுமா?

by Rohini |   ( Updated:2024-12-26 01:30:09  )
chandrababu
X

chandrababu

சினிமாவில் அறிமுகம்:

1947 ஆம் ஆண்டு சினிமாவிற்குள் நுழைகிறார் சந்திரபாபு. ஆரம்பத்தில் சிறு சிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்தவர் வாழப்பிறந்தவன் என்ற படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகம் ஆகிறார். டி ஆர் ராமண்ணா இயக்கத்தில் அந்த படத்தில் அவருடைய நகைச்சுவை அனைவரையும் ரசிக்கும்படியாக அமைந்தது. அந்த படத்திற்கு பிறகு மீண்டும் டி ஆர் ராமண்ணா பானுமதியை வைத்து மணமகன் தேவை என்ற படத்தை எடுப்பதாக இருந்தார்.

அதில் ஹீரோ யார் என்பதை உறுதி செய்யாமல் இருந்தது. ஆனால் வாழப்பிறந்தவன் படத்திற்கு பிறகு மணமகன் தேவை படத்தில் சந்திரபாபுவே டி ஆர் ராமண்ணா ஒப்பந்தம் செய்கிறார். இது சம்பந்தமான அறிவிப்பை பத்திரிகைகளில் வெளியிடுகிறார். அதில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் சந்திரபாபு முக்கியமான ரோலில் நடிப்பதாகவும் கதாநாயகியாக பானுமதி நடிப்பதாகவும் ஹீரோ தேவை என்ற வகையில் விளம்பர போஸ்டராக பத்திரிகைகளில் வெளியிடுகிறார் டி.ஆர். ராமண்ணா.

படையெடுத்த நடிகர்கள்:

வாழப்பிறந்தவன் படத்தில் சந்திரபாபுவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட அனைவருக்கும் தெரிந்த ஒரு நடிகராக மாறுகிறார். அதனால் இந்த விளம்பர பத்திரிகை பார்த்ததும் சந்திரபாபு வீட்டிற்கு பல நடிகர்கள் படையெடுத்து வருகின்றனர். அசோகன், மனோகர் ,ஜெமினி கணேசன் என அடுத்தடுத்து நடிகர்கள் சந்திரபாபுவை தேடி வருகின்றனர் .ஏனெனில் மணமகன் தேவை படத்திற்கு தன்னை ஹீரோவாக சிபாரிசு செய்ய வேண்டும் என்பதற்காகவே சந்திரபாபுவை தேடி வந்தனர்.


ஆனால் கடைசியில் அந்த படத்தில் சிவாஜி கணேசன் ஹீரோவாக நடித்தார். அந்த படத்தில் அமைந்த பம்பரக் கண்ணாலே காதல் சங்கதி சொன்னாலே பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது. அந்த ஒரு பாடலால் சந்திரபாபுவின் வாழ்க்கையே மாறிப்போனது. காசு பணம் என கொட்ட அவருடைய வாழ்க்கை ஏகபோக வாழ்க்கையாக மாறியது.

அலிபாபுவும் 40 திருடர்களும்:

இந்த நிலையில் தான் சேலம் மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திலிருந்து சந்திரபாபுவுக்கு தொலைபேசி அழைப்பு வர நாங்கள் எடுக்கும் அடுத்த படத்திற்கு உங்களை தான் ஒப்பந்தம் செய்ய இருக்கிறோம். 15000 ரூபாய் அட்வான்ஸ் ஆக தருகிறோம். அக்ரிமெண்ட்டில் கையெழுத்து இடவேண்டும். அதோடு ட்ரெயின் டிக்கெட் அனுப்பி விடுகிறோம். நாளை சேலத்திற்கு ட்ரெய்னில் வந்து சேரும்படி கேட்டுக்கொள்கிறோம் என அந்த அழைப்பு வர சந்திரபாபுவுக்கு ஒரே சந்தோஷம்.

அதுவரை 15 ஆயிரம் ரூபாயை அவர் பார்த்ததே இல்லை. அவ்வளவு பெரிய தொகை அதோடு இந்த படத்திற்காக மூன்று மாதம் சேலத்திலேயே தங்கும் படி மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனத்திலிருந்து சொல்ல அதற்கும் சம்மதம் தெரிவித்திருக்கிறார் சந்திரபாபு. அது எம்ஜிஆர் நடித்த அலிபாபாவும் 40 திருடர்களும் திரைப்படத்திற்காக. அந்தப் படத்தில் எம்ஜிஆர்தான் சந்திரபாபுவை போட வேண்டும் என சொல்லியிருக்கிறார்.

ஆனால் துரதிர்ஷ்டவசமாக சந்திரபாபுவின் சகோதரி கிணற்றில் விழுந்து இறந்துவிட இந்தப் படத்தையே கேன்சல் செய்கிறார் சந்திரபாபு. ஆனால் மாடர்ன் தியேட்டர் அதிபதி, எம்ஜிஆர், பானுமதி என அடுத்தடுத்து சந்திரபாபுவிடம் நாங்கள் வெயிட் பண்றோம் என சொல்லியும் ஒரு மாத காலம் என்னால் எங்கேயும் வர முடியாது .செய்ய வேண்டிய சடங்குகள் எல்லாம் நிறைய இருக்கின்றது. அதனால் இந்த படத்தை நான் கேன்சல் செய்கிறேன் என சொல்லிவிட்டார். இல்லையென்றால் அந்தப் படத்தில் சந்திரபாபு நடித்து மேலும் அந்தப் படம் மிகப்பெரிய புகழையும் உச்சத்தையும் அடைந்திருக்கும் என இந்த தகவலை சந்திரபாபுவின் தம்பி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

Next Story