தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன்னு சொன்ன ரஜினி மகளுக்கு தமிழ் தெரியாது.. தனுஷ் செம்ம கலாய்
தமிழ் சினிமாவில் இப்போது ஒரு புகழ் பெற்ற நடிகராக இருப்பவர் நடிகர் தனுஷ். தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு ஹிந்தி ஹாலிவுட் என தன்னுடைய கேரியரை அடுத்த கட்ட நகர்வுக்கு கொண்டு சென்றிருக்கிறார். உலக அளவில் ஒரு புகழ்பெற்ற நடிகராகவும் திகழ்ந்து வருகிறார் தனுஷ்.
தற்போது கைவசம் ஏராளமான படங்களை வைத்திருக்கும் ஒரே நடிகர் என்ற பெருமைக்கும் சொந்தக்காரராக இருப்பவர் தனுஷ். இவருடைய நடிப்பில் கடைசியாக வெளியான ராயன் திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்ற போதிலும் அடுத்ததாக இவர் நடித்துக் கொண்டிருக்கும் இட்லி கடை படத்தின் மீது பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
இட்லி கடை திரைப்படத்தை தனுஷ் தான் இயக்கி வருகிறார். ஏற்கனவே இவர் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படமும் ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கின்றது. இன்னொரு பக்கம் தெலுங்கு இயக்குனர் சேகர் கமுலாவுடன் குபேரா என்ற படத்திலும் நடித்து வருகிறார் .
சமீபத்தில் தான் இவருடைய விவாகரத்து பிரச்சனை முடிவுக்கு வந்தது. இருவருக்கும் விவாகரத்து அளித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. கிட்டத்தட்ட 18 வருட கால வாழ்க்கையில் இருந்து விடுபட்டிருக்கிறார் தனுஷ். ரஜினிகாந்தின் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை காதலித்து திருமணம் செய்து கொண்ட தனுஷ் ஆரம்பத்தில் மிகவும் சந்தோஷமாகத்தான் வாழ்ந்து வந்தனர்.
இரு மகன்கள் பெற்ற நிலையில் இருவரும் அவரவர் கேரியரில் பிஸியாக மாறிவிட்டனர். ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ஒரு பக்கம் படங்களை இயக்குவதிலும் தனுஷ் ஒரு பக்கம் படங்களில் நடிப்பதிலும் மிகவும் பிசியாக இருந்து வந்தனர். திடீரென இவர்களுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.
இதற்கு இடையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பற்றி தனுஷ் ஒரு பழைய பேட்டியில் பேசிய செய்தி தற்போது வைரலாகி வருகின்றது. அதில் தனுஷ் ஐஸ்வர்யா ரஜினிகாந்தை அருகில் வைத்து என்னுடைய பெர்சனாலிட்டியை பார்த்து தான் இவங்க விழுந்தாங்க.
இத்தனை நாளா நான் தான் முதலில் அவரிடம் காதலை சொன்னேன் என அனைவரும் நினைத்துக் கொண்டிருப்பீர்கள். அதுதான் இல்லை. அவங்க தான் என்ன பார்த்து ப்ரொபோஸ் பண்ணாங்க. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உப்பிட்ட தமிழ் மண்ணை நான் மறக்க மாட்டேன் என தமிழுக்காக குரல் கொடுத்தவர் . அவரின் மகளான இவருக்கு ஆரம்பத்தில் தமிழே தெரியாது. இப்பொழுது தான் என்னிடமிருந்து தமிழ் கற்றுக் கொள்கிறார் என மிகக் கிண்டலாக ஐஸ்வர்யா ரஜினிகாந்தை நக்கல் அடித்த அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகின்றது.