விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் இயக்குனர் செய்த மேஜிக்... அட அவரே அசந்துட்டாரே!
எத்தனையோ படங்களில் நடிகர், நடிகைகள் விதவிதமான உடைகளை அணிவதைப் பார்த்திருப்போம். அதுல ஒரு சில உடைகள் அப்படியே நம் மனதில் தங்கிவிடும். அப்படி திரை ரசிகர்கள் மத்தியில் அப்படியே தங்கிவிட்ட ஒரு உடை அலங்காரம்தான் விண்ணைத் தாண்டி வருவாயா. அந்தப் படத்திலே திரிஷா அணிந்திருந்த உடை அலங்காரம்.
சாதாரண புடவை: அந்தப் படத்திலே ஆடம்பரமான உடைகளை எல்லாம் திரிஷா அணிந்ததாக சொல்ல முடியாது. சாதாரண புடவையைத்தான் அணிந்திருப்பார். ஆனாலும் ரசிகர்கள் மனதிலே 'பச்'சென்று ஒட்டிக் கொண்டது அந்த உடை என்றுதான் சொல்ல வேண்டும்.
நளினி ஸ்ரீராம்: அந்தப் படத்தில் திரிஷாவுக்காக உடை அமைத்தவர் நளினி ஸ்ரீராம். ஒரு நடிகைக்கோ, நடிகருக்கோ உடையைத் தயார் செய்து சூட்டிங் ஸ்பாட்டுக்கு அனுப்பிவிட்டால் அதுக்கு அப்புறம் அதைப் பற்றி நான் நினைச்சிக்கூட பார்க்க மாட்டேன். விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் ஒரு குறிப்பிட்ட பாடல் காட்சியை எனக்காக அந்தப் படத்தின் இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் போட்டுக் காட்டினார்.
எந்தப் படத்திலுமே காட்டியதில்லை: பார்த்த உடனே அதைப் பார்த்து நான் அசந்து போனேன் என்றுதான் சொல்ல வேண்டும். எத்தனையோ படத்துக்கு நான் ஆடைகளை வடிவமைத்து இருந்தாலும் அந்தப் படத்தில் அந்த உடையை அவர் அவ்வளவு அழகாகக் காட்டியது போல வேறு எந்தப் படத்திலுமே காட்டியதில்லை என்றுதான் சொல்வேன்.
கலர்ல கொஞ்சம் வேலை: திரிஷாவுக்காக சாதாரணமான புடவைகளை வாங்கி கலர்ல மட்டும் நாங்க கொஞ்சம் வேலை செஞ்சோம் அவ்வளவுதான். அந்தப் புடவைக்கு ரசிகர்கள் மத்தியில் இப்படி ஒரு வரவேற்பு கிடைக்கும்னு நான் கனவிலும் எதிர்பார்க்கவில்லை என்று பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார் நளினி ஸ்ரீராம். மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் பகிர்ந்துள்ளார்.
விண்ணைத் தாண்டி வருவாயா: 2010ல் கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, திரிஷா இணைந்து நடித்த சூப்பர்ஹிட் படம் விண்ணைத் தாண்டி வருவாயா. இந்தப் படத்திற்கு இசை அமைத்தவர் ஏ.ஆர்.ரகுமான். படத்தில் அத்தனைப் பாடல்களும் மாஸ் ரகங்கள். இந்தப் படத்தில் சிம்பு, திரிஷாவின் காதல் செமயாக ஒர்க் அவுட் ஆகியுள்ளது. சமீபத்தில் இந்தப் படம் சென்னையில் ஒரு தியேட்டரில் 1000 நாள்களைக் கடந்து ஓடி சாதனை படைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.