எம்ஜிஆரை ஜெய்சங்கர் எப்படி கூப்பிடுவாருன்னு தெரியுமா? இதுதான் காரணமா இருக்குமோ?!

By :  Sankaran
Update: 2024-12-11 15:30 GMT

மக்கள் திலகம், புரட்சித்தலைவர், பொன்மனச்செம்மல், ஏழைகளின் இதயக்கனின்னு போற்ப்பபடுபவர் எம்ஜிஆர். தனது கருத்துகள் ஒவ்வொன்றும் திரைப்படங்களில் நல்ல பயனுள்ள தத்தவங்களாக இருக்க வேண்டும் என்பதில் எம்ஜிஆர் நோக்கமாகக் கொண்டு இருப்பார். உதாரணத்துக்கு அவருடைய படங்களை இப்போது பார்த்தாலும் உங்களுக்குத் தெரியும்.

அவர் பேசும்போது தத்துவங்கள் இயல்பாக வந்து கொட்டும். அது நமக்கு கொஞ்சமும் சலிப்பாகவும் இருக்காது. சிலர் பேசும்போது அடிக்கடி கருத்துகளைச் சொன்னால் அவர்களை நக்கலாகக் 'கருத்து கந்தசாமி'ன்னு சொல்வதுண்டு. ஆனால் எம்ஜிஆரை யாரும் அப்படி அழைக்க மாட்டார்கள்.

அவரது படங்களில் பாட்டு பைட் சூப்பராக இருக்கும். அது தவிர எம்ஜிஆருக்கு காமெடி சென்ஸ்சும் அதிகமாக இருக்கும். நாகேஷூடன் இவர் சேர்ந்து நடிக்கும் காட்சி என்றால் அது பிரமாதமாக இருக்கும்.

mgr

இவருடைய சிரிப்பும், நடனமும், பேசும் ஸ்டைலும், சண்டையிடும் வேகமும் பார்ப்பவர்களைப் பரவசப்படுத்தும். அதனால் தான் அன்று முதல் இன்று வரை எம்ஜிஆர் படங்கள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் அவ்வளவு மவுசு உள்ளது.

அந்த வகையில் ஜெய்சங்கரும் எம்ஜிஆர், சிவாஜி காலகட்டத்தில் தனக்கென தனி பாதையை அமைத்துக் கொண்டு வளர்ந்து வந்த நடிகர் தான். இவரை தென்னகத்தின் ஜேம்ஸ்பாண்டு என்றே ரசிகர்கள் அழைத்தனர். துப்பறியும் பாணி கதை அம்சம் கொண்ட படங்கள் அவ்வளவு விறுவிறுப்பாக இருக்கும்.

ஹாலிவுட் நடிகர்களில் ஜேம்ஸ்பாண்டு வேடம் ஏற்று பலரும் நடிப்பார்கள். அவர்களுக்கு இணையாக நடித்து அசர வைப்பார். அவர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரை எப்படி அழைப்பார்னு பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் வாசகர் ஒருவர் கேள்வி கேட்டுள்ளார். அதற்கு அவர் சொன்ன பதில் ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. 'சார்'னு மரியாதையுடன் அழைப்பார் என்கிறார் சித்ரா லட்சுமணன்.

enga veeru pillai

எம்ஜிஆரை பெரும்பாலான ரசிகர்கள் 'வாத்தியார்'னு அன்போடு அழைப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. வாத்தியார் என்றால் பாடம் நடத்துபவர் என்று பொருள். மாணவர்களுக்குப் பாடம் நடத்துபவர் ஆசிரியர். இவரையும் ஆங்கிலத்தில் டீச்சர், சார்னு சொல்வாங்க. மக்களுக்குப் பாடம் நடத்துபவர் எம்ஜிஆர். அப்படின்னா ஜெய்சங்கர் சொன்னது சரிதானே. 

Tags:    

Similar News