75 ஆண்டுகளுக்கு முன்னால் சினிமாவுக்கு விளம்பரம் இப்படியா நடந்தது? ரொம்ப சூப்பரா இருக்கே!

by Sankaran |   ( Updated:2025-01-22 16:30:10  )
parasakthi
X

80களில் சினிமா வால்போஸ்டர் மூலம் ரொம்பவே ரீச்சானது. அப்போது திரையரங்குகளில் எல்லாம் படத்தின் போஸ்டர் உடன் திரையரங்கு சார்பாகவும் ஒரு சிறு போஸ்டர் ஒட்டுவார்கள். தினசரி 2 காட்சிகள். வெள்ளி, சனி, ஞாயிறு 3 காட்சிகள் என டூரிங் டாக்கீஸின் சார்பாக பக்கத்து ஊர்களில் பஸ்ஸ்டாண்டு, கடையின் சுவர்களில் ஒட்டுவார்கள்.

இப்படம் இன்றே கடைசி: அப்போது அந்தப் படம் கொஞ்சம் பிரபலமானால் இப்படம் இன்றே கடைசி என்று ஒட்டுவார்கள். அதனால் படத்தைத் தூக்கி விடுவார்கள் என்று கடைசி நாளன்று கூட்டம் அதிகமாக வரும். அந்தவகையில் 80ஸ் குட்டீஸ்களுக்கு இது மனதில் என்றென்றும் பசுமையான நினைவுகளாக இருக்கும். அதிலும் டூரிங் டாக்கீஸில் மணலைக் கூட்டி அதன்மீது உட்கார்ந்து படம் பார்க்கும் சுகமே தனிதான்.

80ஸ் காலகட்டமே இவ்வளவு சுவாரசியம் என்றால் 75 ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு சினிமாவுக்கு விளம்பரம் எப்படி இருந்து இருக்கும் என்று பார்க்கலாமா...


மாட்டுவண்டி: 1952ல் வெளியான நடிகர்திலகத்தின் முதல் படம் பராசக்தி. இந்தப் படத்தின் போது விளம்பரம் எப்படி செய்தார்கள் தெரியுமா? அந்தக் காலத்தில் மாட்டுவண்டியில்தான் சுவரொட்டியை ஒட்டுவார்கள். சினிமா வால் போஸ்டர் மாட்டுவண்டியின் இரு சக்கரத்திற்கு மேலும் ஜம்முன்னு ஒட்டி இருப்பாங்க.

தப்பட்டை. சினிமா நோட்டீஸ்: அதுக்கு முன்னால ரெண்டு பேரு தப்பட்டையை அடிச்சிக்கிட்டு ஊர் ஊராக சொல்லிக்கிட்டு போவாங்க. என்ன படம், எந்த தியேட்டர், எத்தனை மணிக் காட்சின்னு சொல்வாங்க. அந்த வண்டி பின்னாடியே சிறுவர்கள் ஓடுவார்கள்.

மாட்டுவண்டியின் பின்னால் இருப்பவர் சினிமா நோட்டீஸ் கொடுத்தபடி செல்வார். இப்போது நம்ம தாத்தா, பாட்டிகளிடம் இதுபற்றி கேட்டால் விலாவரியாக சொல்வார்கள். என்ன இருந்தாலும் அந்தக் காலம் மாதிரி இப்போது வருமா என மனசு ஏங்கத்தான் செய்கிறது.

பராசக்தி: 1952ல் கிருஷ்ணன் பஞ்சு இயக்கத்தில் சிவாஜி நடித்த படம் பராசக்தி. இந்தப் படத்தில்தான் சிவாஜி அறிமுகம். ஆனால் மனுஷன் என்னம்மா நடிச்சிருக்காருன்னு நம்மை வாயைப் பிளக்க வைத்துவிட்டார். கலைஞர் கருணாநிதியின் வசனத்தைப் பேசி தெறிக்க விட்டிருப்பார். படத்திற்கு ஆர்.சுதர்சனம் இசை அமைத்துள்ளார். பாடல்கள் எல்லாமே அருமை. படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது.

Next Story