இளையராஜாவின் அறிமுகத்தைப் பாருங்க... சொக்க வைக்கும் பாடல்களைப் பாடிய கேரள பாடகி

by Sankaran |   ( Updated:2025-01-07 04:30:51  )
ilaiyaraja
X

இசைஞானி இளையராஜா வழக்கமாக நன்கு பாடத்தெரிந்தவர்களை வைத்தே பாடல்களை உருவாக்குபவர். எஸ்.ஜானகி, சித்ரா, எஸ்.பி.சைலஜா, பி.சுசீலா, வாணி ஜெயராம் இவர்கள் தான் பெரும்பாலும் இளையராஜாவின் பாடல்களை ஆக்கிரமிக்கும் பின்னணிப் பாடகிகள். ஆனால் அவர்களில் இருந்து முற்றிலும் மாறுபட்டவர் தான் இந்தப் பாடகி. அவர் யார்? என்னென்ன ஹிட் பாடல்களைக் கொடுத்திருக்கிறார்னு பார்க்கலாமா...

கேரளாவைச் சேர்ந்தவர் சுனந்தா. 1984ல் வெளியான படம் புதுமைப்பெண். பாரதிராஜாவின் இயக்கத்தில் வந்த இந்தப் படத்திற்கு இசைஞானி இளையராஜா சுனந்தாவை அறிமுகப்படுத்தினார். இந்தப் படத்தில் அவர் பாடிய 'இது ஒரு காதல் மயக்கம்' என்ற காதல் பாடலை ஜெயச்சந்திரனுடன் இணைந்து அருமையாக பாடியுள்ளார். இவரது பாடல்கள் பெரும்பாலும் அக்காலங்களில் வானொலியில் கேட்கலாம். 80ஸ் குட்டீஸ்களைக் கேட்டால் தெரியும்.

84ல் இருந்து 90 வரை இவரது சூப்பர்ஹிட் பாடல்கள் நிறைய உள்ளன. சின்ன வீடு படத்தில் வந்த 'வெள்ளமனம் உள்ள மச்சான்' பாடலை மலேசியா வாசுதேவனுடன் இணைந்து பாடியுள்ளார். சோகமான சூழ்நிலையில் இருக்கும் பலருக்கும் இந்தப் பாடல் அவர்களது மனதுக்கு மருந்து போட்டது போல இருக்கும். கேட்க கேட்க மனதுக்கு ஒரு இனிமையைத் தரும் இது.

எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இவர் பாடிய சூப்பர்ஹிட் பாடல் 'செண்பகமே செண்பகமே'. இப்போது கேட்டாலும் நம் செவிகளைக் குளிரச் செய்யும். சொல்லத்துடிக்குது மனசு படத்தில் வரும் 'பூவே செம்பூவே பாடல்' அக்கால இளசுகளை சுண்டி இழுத்தது. இதை இப்போது கேட்டாலும் சுகமே.

புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் நடித்த சேதுபதி ஐபிஎஸ் படத்தில் வரும் 'விடியும் நேரம் அருகில் வந்தது' பாடல் அற்புதமானது. வீரத்தை ஊட்டக்கூடியது. இந்தப் பாடலுக்கு இளையராஜா இவரை செலக்ட் பண்ணியது அலாதியானது.

singer sunantha

உன்னால் முடியும் தம்பி படத்தில் என்ன சமையலோ பாடலைப் பாடியிருந்தார் சுனந்தா. இதை யாரால்தான் மறக்க முடியும்? எஸ்பிபி, சித்ராவுடன் இணைந்து பாடிய இந்தப் பாடலும் சரி. செவ்வந்தி படத்தில் வரும் செம்மீனே செம்மீனே பாடலும் சரி. இன்றளவும் ரம்மியமானவையே.

அதே போல ராமராஜன் நடித்து வெளியான எங்க ஊரு காவல்காரன் படத்தில் வரும் 'சிறுவாணி தண்ணி குடிச்சு' பாடல் மனதைக் கிறங்க வைக்கும் ரகம். இளையராஜா, எஸ்.பி.சைலஜாவுடன் இணைந்து சுனந்தா பாடிய பாடல் இது.

அதே போல இவர் பாடிய மற்றொரு சூப்பர்ஹிட் பாடல் பூங்குயில் ரெண்டு. இது வீட்ல விசேஷங்க படத்தில் வரும். எல்லாலற்றிற்கும் சிகரம் வைத்தாற்போல சிறைப்பறவை படத்தில் இவர் பாடிய 'ஆனந்தம் பொங்கிட பொங்கிட' பாடல் அக்கால இலங்கை வானொலி நிலையத்தில் ஒலிபரப்பாத நாளே இல்லை எனலாம். வால்டர் வெற்றிவேல் படத்தில் வரும் 'மன்னவா மன்னவா மன்னாதி மன்னன் அல்லவா' என்ற சூப்பர்ஹிட் பாடலையும் இவர்தான் பாடியுள்ளார்.

Next Story