ஷங்கரின் அந்தப் படத்தில் முதலில் நடிக்க வேண்டியது கார்த்திக்தானாம்.. ச்ச மிஸ் ஆயிடுச்சே
நவரச நாயகன்: தமிழ் சினிமாவில் நவரச நாயகனாக 80களில் இருந்து மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் கார்த்திக். அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் அறிமுகமான கார்த்திக் அந்தப் படத்தில் மிகவும் சின்னப்பையனாக தோன்றினார். ஆனாலும் படம் பெரிய அளவில் வெற்றிப்பெற்றது. இன்னொரு பக்கம் எம்ஜிஆர் சிவாஜி காலத்தில் புகழ்பெற்ற நடிகராக இருந்த முத்துராமனின் மகன் என்ற பெயர் இருந்தாலும் அவருடைய முயற்சியால் அடுத்தடுத்து படங்களில் நடிக்கக் கூடிய வாய்ப்பு கார்த்திக்கு கிடைத்தது.
கிராமத்து நாயகன்: தொடர்ந்து வெற்றிப்படங்களை கார்த்திக் கொடுத்தாரா என்றால் இல்லை. வரிசையாக தோல்வி படங்களையும் கொடுத்து வந்ததனால் சினிமாவில் இவரால் சர்வே பண்ண முடியுமா என்ற சந்தேகமும் இருந்தது. ஆனால் மணிரத்னம் இயக்கத்தில் மௌனராகம் படத்தில் நடித்து மீண்டும் புகழ்பெற்றார் கார்த்திக். அதனை தொடர்ந்து கிழக்கு வாசல், கிழக்கு முகம், நாடோடித்தென்றல் என கிராமத்து கதைகளை மையப்படுத்தி அமைந்த படங்களில் நடித்து ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார் கார்த்திக்.
விமர்சனங்கள்: 90களில் கார்த்திக்தான் முன்னணி நடிகராக மாறினார். குஷ்பூ, ரோஜா,மீனா, ரேவதி என அனைத்து நடிகைகளுக்கும் ஜோடியாக நடித்தார் கார்த்திக். இவர் மீது பர்ஷனலாகவே பல விமர்சனங்கள் இருந்தன. மதுப்பழக்கத்திற்கு ஆளானார், ஷூட்டிங்கிற்கு சரியான நேரத்தில் வரமாட்டார் என்றெல்லாம் பல விமர்சனங்கள் எழுந்தன. இருந்தாலும் படப்பிடிப்பிற்கு என வந்துவிட்டால் முழு மூச்சாக அவருடைய வேலையை முடித்துக் கொடுத்து விட்டுதான் போவார்.
ஐ படம்: இந்த நிலையில் ஷங்கர் இயக்கிய ஒரு படத்தில் முதலில் கார்த்திக்தான் நடிக்க வேண்டியது என இயக்குனர் வெங்கடேஷ் ஒரு பேட்டியில் கூறினார். ஷங்கர் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஐ படத்தில் ஒரு கேரக்டரில் கார்த்திக்கை நடிக்க வைக்க முயற்சிகள் நடந்து கொண்டிருந்ததாம். கார்த்திக்குடன் பேச வேண்டுமென்றால் இயக்குனர் வெங்கடேஷால்தான் முடியுமாம். ஏனெனில் இவர் ஒருத்தர் மட்டும்தான் இன்றுவரை கார்த்திக்குடன் தொடர்பில் இருக்கிறாராம்.
அதனால் ஷங்கர் வெங்கடேஷுக்கு போன் செய்து கார்த்திக்குடன் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்ய வேண்டும் என கேட்டிருக்கிறார். ஷங்கர் கேட்டுக் கொண்டதற்கிணங்க கார்த்திக்கிடமும் பேசி ஷங்கரையும் கார்த்திக்கையும் சந்திக்க வைத்திருக்கிறார் வெங்கடேஷ். ஆனால் அந்தப் படத்தில் ஷங்கர் சொன்ன கேரக்டர் கார்த்திக்கு செட்டாகவில்லையாம். அதனால் நடிக்க முடியாது என கார்த்திக் மறுத்துவிட்டாராம்.