அந்த நடிகருக்காக 10 நாள்கள் காத்திருந்து நடித்த எம்ஜிஆர்.. அவ்வளவு முக்கியமானவரா?

by Rohini |   ( Updated:2025-01-07 01:30:43  )
mgr
X

mgr

தமிழ் சினிமாவில் அனைவரும் மதிக்கத்தக்க நடிகராக வாழ்ந்தவர் நடிகர் எம்ஜிஆர். புரட்சித்தலைவர் என்றும் பொன்மனச்செம்மல் என்றும் சின்னவரு என்றும் ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டவர். ஏழைகளின் ராஜா என்றே எம்ஜிஆரை சொல்லலாம். அந்தளவுக்கு ஏழை மக்களுக்கு ஒரு தோழனாக நின்று அவர்களது குறைகளை தீர்த்து வைத்துக் கொண்டிருந்தவர்.

அரசியலிலும் ஒரு மாபெரும் தலைவராக பார்க்கப்பட்டார். ஆரம்பத்தில் திமுக கட்சியில் உறுப்பினராக இருந்து பின் கட்சியின் சில செயல்பாடுகள் பிடிக்காமல் அங்கிருந்து தனியாக பிரிந்து அதிமுக என்ற கட்சியை உருவாக்கி அதை தமிழ் நாடு முழுக்க ஒரு பெரிய கட்சியாக மாற்றினார் . அவர் ஆரம்பித்த அந்த கட்சியை மேலும் சிறப்பித்தவர் ஜெயலலிதா. அரசியலில் அசைக்க முடியாத ஒரு மாபெரும் சக்தியாக உருவானார் எம்ஜிஆர்.

தான் நடிக்கும் படங்களின் மூலம் மக்களுக்கு தேவையான நல்ல கருத்துக்களை எடுத்துரைத்தார் எம்ஜிஆர். அதை போல் தன்னுடைய படங்களில் என்றைக்குமே அவர் மதுப்பழக்கம், புகை இவைகளை பெரிதாக காட்டியதே இல்லை. அப்படி அவர் நடித்ததும் இல்லை.

தன்னுடைய படங்கள் ரசிகர்களுக்கு நல்ல செய்திகளை சொல்ல வேண்டும் என்றும் தன்னால் யாரும் கெட்டுப் போகக்கூடாது என்றும் விரும்பியவர் எம்ஜிஆர். இந்த நிலையில் அவர் ஒரு சிறந்த மனிதாபிமானம் உள்ளவர் என அனைவருக்கும் தெரியும். அதற்கு இன்னொரு உதாரணமாக நடந்த சம்பவம் பற்றி தான் சித்ரா லட்சுமணன் ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.

எம்ஜிஆர் நடிப்பில் காவல்காரன் திரைப்படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அந்த படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தபோது அதில் கவர்ச்சி வில்லன் கண்ணன் என்பவர் நடித்துக் கொண்டிருந்தாராம். அருகே எம்ஜிஆரின் மற்றொரு படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்ததாம். அப்போது கண்ணன் அந்த படப்பிடிப்பில் விபத்தினால் காயம் ஏற்பட அதை அறிந்த உடனே எம்ஜிஆர் இந்த படப் பிடிப்பிற்கு வந்து விட்டாராம்.

உடனே பத்து நாள் அல்லது 15 நாள் ஆனாலும் பரவாயில்லை. அவர் முழுவதும் குணமடைந்த பிறகே மீதி படப்பிடிப்பை தொடங்க வேண்டும். அதுவரை படப்பிடிப்பு நடத்தக் கூடாது என்று சொன்னாராம் எம்ஜிஆர். ஆனால் இப்போதைய காலகட்டத்தில் ஒரு நடிகருக்கு விபத்து ஏற்பட்டாலும் அல்லது துரதிஷ்டவசமாக அவரால் நடிக்க கூடிய சூழ்நிலை இல்லாவிட்டாலும் உடனே அவரை விலக்கிவிட்டு வேறொரு நடிகரை போடுவது தான் வழக்கமாகி வருகிறது.

ஆனால் எம்.ஜி.ஆர் அந்த நடிகர் முழுவதும் குணமடைந்த பிறகு இந்த படப்பிடிப்பை தொடங்கலாம் என காத்திருந்து அதன் பிறகே அந்த படப்பிடிப்பை நடத்த சொல்லி இருக்கிறார். இதிலிருந்து அவருடைய பெருந்தன்மை எந்த அளவு போற்றப்படுகிறது என சித்ரா லட்சுமணன் கூறியிருக்கிறார்.

Next Story