கமல், எஸ்.பி.முத்துராமன் காம்போவில் உருவான படங்கள்... ஹிட் எது? பிளாப் எது?
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 80களில் கமல் பல சூப்பர்ஹிட் படங்களில் நடித்துள்ளார். அவரது இயக்கத்தில் பிளாப் படங்களும் உள்ளன. வாங்க பார்க்கலாம்.
எஸ்பி.முத்துராமன் இயக்கத்தில் கமல் நடித்த முதல் படம் ஒரு ஊதாப்பூ கண்சிமிட்டுகிறது. 76ல் வெளியானது. கமல், சுஜாதா இணைந்து நடித்தனர். பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனா ஆவரேஜான திரைப்படம்தான். 2வது படமாக 1976ல் வெளியான மோகம் 30 வருஷம்.
கமல், சுமித்ரா இணைந்து நடித்தனர். இது சூப்பர்ஹிட் படம். 1977ல் வெளியானது ஆடு புலி ஆட்டம். கமல், ரஜினி, ஸ்ரீபிரியா உள்பட பலர் இணைந்து நடித்தனர். நல்ல எதிர்பார்ப்பு. சூப்பர்ஹிட் ஆனது. 1982ல் சகலகலாவல்லவன் வெளியானது. கமல், அம்பிகா இணைந்து நடித்தனர். இளையராஜா இசை. பாட்டு, பைட் சூப்பர். இது வெள்ளி விழா கண்டது.
1983ல் வெளியான படம் தூங்காதே தம்பி தூங்காதே. கமல், ராதா உள்பட பலர் இணைந்து நடித்தனர். இதுவும் வெள்ளிவிழா படம்தான். இளையராஜா இசை. பாட்டு, பைட் சூப்பர். 1989ல் கமல், ஷோபனா, சத்யராஜ் நடித்த எனக்குள் ஒருவன் படம் வெளியானது. இந்தப் படம் 100 நாள் ஓடி ஆவரேஜ் ஹிட் ஆனது. 1985ல் வெளியானது உயர்ந்த உள்ளம். கமல், அம்பிகா உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை. பாட்டு சூப்பர். 100 நாள் ஓடியது.
1984ல் ஜப்பானில் கல்யாணராமன் வெளியானது. கமல், ராதா, சத்யராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். இது 50 நாள் ஓடியது. இது ஆவரேஜ்தான். 1987ல் வெளியான படம் பேர் சொல்லும் பிள்ளை. கமல், ராதிகா, சுலக்ஷனா உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் பாடல்கள் ஹிட். இது 100 நாள் கடந்து ஓடி வெற்றி பெற்றது.