பொங்கலுக்கு களம் இறங்கிய கமல் படங்கள்... சூப்பர்ஹிட் எது? ப்ளாப் எது?

By :  Sankaran
Update: 2025-01-14 15:00 GMT

பொங்கல் தினத்தன்று இதுவரை என்னென்ன படங்கள் ரிலீஸ் ஆகி உள்ளன? எத்தனை படங்கள் கமலுக்கு சூப்பர்ஹிட்னு பார்க்கலாமா...

பார்த்தால் பசி தீரும்: 1962ல் பார்த்தால் பசி தீரும். சிவாஜி நடித்த இந்தப் படத்தில் கமல் சிறுவனாக நடித்து இருந்தார். இதுதான் அவருக்கு பொங்கலுக்கு வந்த முதல் படம். மிகப்பெரிய வெற்றி படம். இந்தப் படத்தில் சிறுவனாக நடித்த கமலே இரட்டை வேடத்தில் நடித்து இருந்தார். 1977ல் டி.என்.பாலு இயக்கத்தில் உயர்ந்தவர்கள் வெளிவந்தது. இந்தப் படத்தில் கமல், சுஜாதா நடித்துள்ளனர். சங்கர் கணேஷ் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் சூப்பர்ஹிட்.

நீயா, மீண்டும் கோகிலா: 1979ல் துரை இயக்கத்தில் வெளிவந்த படம் நீயா. சங்கர் கணேஷ் இசை அமைத்துள்ளார். கமல், ஸ்ரீபிரியா உள்பட பலர் நடித்துள்ளனர். பாடல்கள் சூப்பர். படம் ஹிட். நாகம் பழி வாங்கும் கதை. ரசிகர்களை ரொம்பவே கவர்ந்தது. 1981ல் ஜிஎன்.ரங்கராஜன் இயக்கத்தில் வெளியான படம் மீண்டும் கோகிலா. இதுல ஸ்ரீதேவி, தீபா உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்த படம். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

ஒரு கைதியின் டைரி: 1983ல் எஸ்.வி.ரமணன் இயக்கத்தில் வெளியான படம் உருவங்கள் மாறலாம். நட்சத்திரப்பட்டாளமே நடித்துள்ளது. இது 100 நாள் ஓடிய வெற்றிப் படம். 1985ல் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான படம் ஒரு கைதியின் டைரி. கமல், ரேவதி உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். இந்தப்படம் வெள்ளிவிழா ஓடிய படம்.


காதல் பரிசு: 1987ல் ஏ,ஜெகநாதன் இயக்கிய படம் காதல் பரிசு. இளையராஜா இசை அமைத்துள்ளார். கமல், ராதா மற்றும் பலர் நடித்துள்ளனர். 100 கடந்து ஓடிய வெற்றிப்படம். 1989ல் கமல், விஜயசாந்தி நடிப்பில் வெளியான படம் இந்திரன் சந்திரன். சுரேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இது தெலுங்கு பட டப்பிங். இது 100 நாள் கடந்து ஓடி பாக்ஸ் ஆபீஸில் வெற்றியைக் கொடுத்தது.

மகாநதி: 1994ல் கமல், சுகன்யா நடிப்பில் வெளியான படம் மகாநதி. சந்தானபாரதி இயக்கியுள்ளார். இளையராஜா இசை அமைத்துள்ளார். படம் சூப்பர்ஹிட் அடித்தது. தை பொங்கலும் வந்தது. பாலும் பொங்குது என்ற சூப்பர்ஹிட் பாடல் இந்தப் படத்தில்தான் உள்ளது.

1995ல் பாலுமகேந்திரா இயக்கத்தில் வெளிவந்த படம் சதிலீலாவதி. ரமேஷ் அரவிந்த், கமல், கோவை சரளா உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜா இசை அமைத்துள்ளார். 100 நாள் கடந்து ஓடியது.

2002ல் மௌலி இயக்கத்தில் வெளியான படம் பம்மல் கே.சம்பந்தம். தேவா இசை அமைத்துள்ளார். கமல், சிம்ரன், அப்பாஸ், சினேகா உள்பட பலர் நடித்துள்ளனர். 100 நாள் கடந்து ஓடி வெற்றி பெற்றது. இது கலக்கல் காமெடி படம்.

அன்பே சிவம்: 2003ல் சுந்தர்.சி. இயக்கத்தில் வெளியான படம் அன்பே சிவம். கமல், மாதவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். வித்யாசாகர் இசை அமைத்துள்ளார். ரசிகர்கள் மத்தில் நல்ல வசூலைக் கொடுத்தது. கமல் மிக அருமையாக நடித்து இருந்தார். 100 கடந்து ஓடி பாக்ஸ் ஆபீஸில் ஹிட் அடித்த படம்.

விருமாண்டி: 2004ல் கமல் நடித்து இயக்கிய படம் விருமாண்டி. நெப்போலியன், பசுபதி, அபிராமி உள்பட பலர் நடித்துள்ளனர். 100 நாள் கடந்து ஓடி ஹிட் அடித்தது. மேற்கண்ட படங்களில் அன்பே சிவம்  காலம் கடந்து பேசப்பட்டது. அந்த நாள்களில் பெரிய அளவில் எதிர்பார்ப்புக்கு ஏற்ற கலெக்ஷனைக் கொடுக்கவில்லை என்றே சொல்லலாம்.

Similar News