கொஞ்சம் கூட யோசிக்காம இப்படி பண்ணிட்டாரே.. விஜயகாந்தை இன்சல்ட் செய்த கமல்!
விஜயகாந்த்:
இன்று விஜயகாந்தின் முதலாமாண்டு நினைவு நாள் அவரது கட்சி சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அரசியலில் இருக்கும் பல்வேறு கட்சித்தலைவருக்கு அழைப்பு விடுத்திருக்கும் நிலையில் ஒவ்வொருவராக வந்து விஜயகாந்துக்கு மரியாதை செலுத்தி விட்டு செல்கின்றனர். இன்று காலை முதலே பொதுமக்கள் பெருங்கூட்டமாக அவருடைய நினைவிடத்திற்கு வருவதை பார்க்கமுடிகிறது. போலீஸார் அங்கு பெருமளவு குவிக்கப்பட்டிருக்கின்றனர்.
அதுமட்டுமில்லாமல் தேமுதிக கட்சி சார்பாக அமைதி பேரணி ஊர்வலமும் நடந்தது. இந்த நினைவு நாளில் விஜயகாந்த் குறித்து பலரும் பல விதமான அனுபவங்களை பேட்டிகளில் பகிர்ந்து வருகின்றனர். இதில் நடிகர் ராதாரவி விஜயகாந்த் குறித்து அவருடைய அனுபவங்களை பகிர்ந்திருக்கிறார். ஆரம்பகாலத்தில் இருந்தே விஜயகாந்தும் ராதாரவியும் நெருங்கிய நண்பர்களாக இருந்துள்ளனர்.
வாடா போடா நண்பர்கள்:
வாடா போடா நண்பர்கள்தான். இவர் மட்டுமில்ல. விஜயகாந்துடன் ஒரு ஐந்து பேர் எப்பொழுதுமே இருப்பார்கள். ராதாரவி, எஸ்.எஸ். ரவிச்சந்திரன், தியாகு, வாகை சந்திரசேகர் இவர்கள்தான் விஜயகாந்துக்கு நெருக்கமான நண்பர்கள். சினிமாவில் நடிக்கும் போது ஈழத்தமிழர்களுக்காக குரல் கொடுத்தவர்களில் விஜயகாந்துடன் சேர்ந்து இந்த நான்கு பேரும் பெரும் முக்கியப்பங்கு வகிக்கின்றனர்.
ஏராளமான போராட்டங்களிலும் ஈடுபட்டிருக்கின்றனர். அதன் பிறகுதான் விஜயகாந்த் அரசியலில் குதித்தார். இந்த நிலையில்தான் ஒரு சமயம் விஜயகாந்தை கமல் இன்சல்ட் செய்ததாக ராதாரவி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். ஒரு விழாவில் கலந்து கொண்ட போது விஜயகாந்துடன் ராதாரவி, எஸ்.எஸ். ரவிச்சந்திரன், தியாகு, வாகை சந்திரசேகர் ஆகியோர் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தார்களாம்.
இன்சல்ட் செய்த கமல்:
எப்பொழுதுமே இவர்கள்தான் கூட்டமாக இருந்து கலாட்டா ரகளை என ஜாலியாக இருப்பார்களாம். அப்போது இவர்களுடன் சேர்ந்து அந்த கூட்டத்தில் காந்திமதியும் டான்ஸ் ஆடிக் கொண்டிருந்தாராம். உடனே அங்கு இருந்த கமல் வேகமாக வந்து ஆடிக் கொண்டிருந்த காந்திமதியை கையை பிடித்து இழுத்துக் கொண்டு போய்விட்டாராம். இது விஜயகாந்துக்கு ஒரு மாதிரியாக இருந்ததாம்.
இன்னொரு பக்கம் கமல் ராதாரவிக்கும் நண்பர் என்பதால் விஜயகாந்தை ராதாரவி சமாதானம் செய்தாராம். இருந்தாலும் விஜயகாந்த் ‘அதெப்படி? இங்கு வந்து காந்திமதியை ஏன் இழுத்துக் கொண்டு போனார்’ என கேட்டு ஆதங்கப்பட்டாராம் விஜயகாந்த்.