எம்.ஜி.ஆர் பாட்டுக்கு சிவாஜி போல நடித்துக் காட்டிய கமல்!.. நடிகர் திலகம் கொடுத்த ரியாக்‌ஷன்!..

by Murugan |
எம்.ஜி.ஆர் பாட்டுக்கு சிவாஜி போல நடித்துக் காட்டிய கமல்!.. நடிகர் திலகம் கொடுத்த ரியாக்‌ஷன்!..
X

MGR Sivaji: எம்.ஜி.ஆர், சிவாஜி இருவருமே நாடகங்களில் நடிப்பு பயிற்சி பெற்று பின்னாளில் சினிமாவில் நுழைந்தவர்கள். சிவாஜியை விட வயதில் மூத்தவர் எம்.ஜி.ஆர். சிறு வயது முதலே இருவரும் அண்ணன் - தம்பிகளாகவே பழகி வந்தார்கள். ஒருவர் வீட்டில் ஒருவர் போய் சாப்பிடுவார்கள். சின்ன வயதிலேயே சிவாஜிக்கு எம்.ஜி.ஆர் நிறைய செலவும் செய்திருக்கிறார்.

சிவாஜியை ‘தம்பி கணேசா’ என அன்பாக அழைப்பார் எம்.ஜி.ஆர். அதேபோல், தன்னிடம் வரும் சில கதைகளை ‘இதை அண்ணன் செய்தால் மட்டுமே நன்றாக இருக்கும்’ என சொல்லுவார் சிவாஜி. இப்படி ஒரு பரஸ்பர அன்பும், மரியாதையும் இருவரிடமும் இருந்தது. இருவரின் ஸ்டைலும் வேறு.


எம்.ஜி.ஆர் சண்டை காட்சிகளை கொண்ட படங்களில் நடித்து பக்கா ஆக்சன் ஹீரோவாக மாறினார். சிவாஜியோ நடிப்புக்கு முக்கியத்தும் உள்ள குடும்ப செண்டிமெண்ட் கதைகள் நடித்து பிரபலமானார். தன்னை விட சிவாஜி சிறந்த நடிகர் என்பதை எம்.ஜி.ஆரே ஒப்புக்கொண்டிருக்கிறார்.

சினிமாவில் போட்டி இருந்ததே தவிர சிவாஜியை எப்போதும் எங்கேயும் எம்.ஜி.ஆர் விட்டு கொடுக்க மாட்டார். சிவாஜியும் அப்படித்தான். அவர்களுக்குள் இருந்த நல்ல நட்பை அரசியல் பிரித்தது என்றே சொல்லலாம். அரசியலில் இருவரும் வெவ்வேறு கொள்கைகளை கொண்டிருந்ததால் அரசியல் மேடைகளில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கி பேசிக்கொண்டனர். ஆனால், சொந்த வாழ்வில் இருவருக்கும் இடையே அப்படி எந்த மோதலும் இல்லை. இதை சிவாஜியே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.


எம்.ஜி.ஆரின் நடிப்பு, நடன ஸ்டைல் வேறு. சிவாஜியின் நடிப்பு மற்றும் நடன ஸ்டைல் என்பது முற்றிலும் வேறு. பல மிமிக்ரி கலைஞர்கள் பல நிகழ்ச்சிகளில் எம்.ஜி.ஆரை போலவும், சிவாஜியை போலவும் நடனமாடியும், நடித்து காட்டியும் பிரபலமானார்கள். ரோபோ சங்கர் கூட பிரபலமானது அப்படித்தான்.

இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய கமல்ஹாசன் ‘ஒருமுறை சிவாஜி, எம்.ஜி.ஆர் என எல்லோரும் இருந்த போது எம்.ஜி.ஆர் நடித்த ‘நான் ஏன் பிறந்தேன்.. நாட்டுக்கு நலம் என புரிந்தேன்’ பாடலுக்கு சிவாஜி ஸ்டைலில் போல நடனமாடி காட்டினேன். என்னை அருகில் அழைத்த சிவாஜி ‘இதை நான் செய்தால் சரியா இருக்குமா?’ என்று கேட்டார். ஒவ்வொருவருக்கும் ஒரு ஸ்டைல் இருக்கிறது. அதை அவர்கள் செய்தால்தான் சரியாக இருக்கும் என்பதுதான் அவர் கேட்ட கேள்வியின் அர்த்தம்’ என பகிர்ந்துகொண்டார்.

Next Story