அந்த விஷயத்தில் விஜய் மாதிரி விஷால்.. விடலனா அவரே கிளம்பிடுவாரு..
மதகஜராஜா படத்தின் வெற்றிக்கு பிறகு டாக் ஆஃப் தி டவுனாக பேசப்படுகிறார் நடிகர் விஷால். அதுவரை விஷால் நடித்து வெளியான எந்த படங்களுமே சரியாக ஓடவில்லை. விஷாலின் கெரியரில் குறிப்பிட்ட படங்கள் தான் வெற்றிப்படங்கள் என கைவிட்டு எண்ணிவிடலாம். அந்தளவுக்கு சொற்ப வெற்றியைத்தான் சினிமாத்துறையில் பார்த்திருக்கிறார் நடிகர் விஷால்.
மதகஜராஜா படத்திற்கு முன் அவரது நடிப்பில் கடைசியாக வெளியான மார்க் ஆண்டனி திரைப்படம் மாபெரும் ப்ளாக் பஸ்டர் வெற்றியடைந்த படமாக அமைந்தது. அதுவும் அந்தப் படத்தில் எஸ்.ஜே. சூர்யாவின் காமெடித்தனமான வில்லன் கேரக்டர் பெரிய அளவில் பேசப்பட்டது. அதுவும் படத்தின் வெற்றிக்கு ஒரு முக்கியகாரணம். அதன் பிறகுதான் மதகஜராஜா படம் வெளியானது.
12 வருடங்களுக்கு முன்பு எடுத்து முடிக்கப்பட்ட படம். சந்தேகத்தின் பேரில்தான் ரிலீஸ் செய்தார்கள். ஆனால் யாருமே எதிர்பார்க்காத ஒரு வெற்றி. இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் சுந்தர் சி விஷால் கூட்டணி அமைய இருப்பதாக ஒரு தகவல் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையில் சிவப்பதிகாரம் படத்தில் விஷால் நடித்ததை பற்றி இயக்குனர் கரு பழனியப்பன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.
இந்தப் படத்திற்காக ஹீரோவை செலக்ட் செய்வதற்கு முன் படத்தின் கதையை தயார் செய்து விட்டாராம் கரு பழனியப்பன். அந்த நேரத்தில்தான் சண்டக்கோழி படம் ரிலீஸாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருந்ததாம். உடனே விஷாலை சிவப்பதிகாரம் படத்தில் நடிக்க வைக்கலாம் என்ற முடிவை எடுத்திருக்கிறார். படத்திற்கான பூஜையும் ஆரம்பமாகியிருக்கிறது.
ஆனால் பூஜைக்கே தாமதமாகத்தான் வந்தாராம் விஷால். கே.பாலசந்தர் மற்றும் ஏவிஎம் சரவணன் என பெரிய ஆள்கள் எல்லாருமே பூஜைக்கு வந்துவிட விஷால் இல்லாமல்தான் சிவப்பதிகாரம் படத்தின் பூஜை நடந்திருக்கிறது. கே. பாலசந்தர் பூஜை முடித்துவிட்டு போன பிறகுதான் விஷால் வந்திருக்கிறார். உடனே கரு பழனியப்பன் நாங்க முதலில் பார்த்துவணங்கிய பிள்ளையாரை நீங்கள் கடைசியாக பார்த்து வணங்க போகிறீர்கள். அவ்வளவுதான் வித்தியாசம். போய் சாமி கும்பிடுங்க என சொன்னாராம்.
அதிலிருந்து ஒரு நாள் கூட பட சூட்டிங்கிற்கு விஷால் தாமதமாக வந்ததே இல்லையாம். அந்த விதத்தில் விஷால் விஜய் மாதிரி. ஏனெனில் சொன்ன நேரத்திற்கு சரியாக வந்துவிடுவார். மாலை 6 மணிக்கு எல்லாம் பேக்கப் பண்ணிவிடுவார். அப்படி மாலை படப்பிடிப்பு தாமதமானால் விஜய் எழுந்து போய்விடுவார். அப்படித்தான் விஷாலும் என கரு பழனியப்பன் கூறினார்.