கெட்ட பய சார் இந்தக் காளி... இந்த வசனம் இவ்வளவு ரீச்சாக இதுதான் காரணமா?

சூப்பர்ஸ்டார் ரஜினின்னா வெறும் ஸ்டைல் மட்டும்தான்னு நினைக்கிறவங்களுக்காக அவர் நடிப்பிலும் புதிய பரிமாணத்தைக் காட்டினார். அப்படி அவர் நடித்த படங்களில் எங்கேயோ கேட்ட குரல், ஆறிலிருந்து அறுபது வரை, முள்ளும் மலரும் ஆகிய படங்களைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். அந்த வகையில் இங்கு நாம் முள்ளும் மலரும் படத்தில் அவரது அசத்தலான நடிப்பு பற்றிப் பார்ப்போம்.
ஒரு மைல் கல்: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் எத்தனையோ படங்கள்ல நடிச்சிருந்தாலும் அவரோட திரைவாழ்க்கையில முள்ளும் மலரும் படம் ஒரு மைல் கல் என்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். இந்தப் படம் குறித்து வேறு என்னவெல்லாம் சொல்றாருன்னு பாருங்க.
கண் பார்வை: எத்தனை அபாரமான நடிப்பு? கண் பார்வையில் காட்டும் உணர்ச்சிகள் அற்புதமானது. படத்தில் கோபம், பாசம், காதல் என அவரது உணர்ச்சிகளுக்கு ஏற்ப அவரது உடல் மொழியும் பாடுபடுகிறது. குறிப்பாக ஒரு கையை இழந்ததுக்குப் பிறகு அவரது உடல்மொழி, பேச்சுமுறை எல்லாமே மாறிவிடுகிறது.

நடிப்பின் உச்சம்: இறுதிக்காட்சியில் அவரது தங்கையின் முடிவை எதிர்பார்த்து நிற்கும் விதமும், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்தி வெளிப்படுத்தும் பாங்கும் நடிப்பின் உச்சம் என்று சொல்வேன். முள்ளும் மலரும் படத்தின் வசனங்கள் அலங்காரம் அற்றவை. ஆனால் மனதிலே அழுத்தமாகப் பதியக்கூடியவை.
கெட்டபய சார் இந்தக் காளி: அதன்காரணமாகத் தான் கெட்டபய சார் இந்தக் காளி என்ற வசனம் இன்றைக்கும் ரசிகர்களின் உதடுகளிலே ஒலித்துக் கொண்டு இருக்கிறது. முள்ளும் மலரும் மகேந்திரனின் இயக்கத்தில் உருவான முதல் படம். ஒரு இயக்குனரின் முதல் படம் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்தது முள்ளும் மலரும் என்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.
முள்ளும் மலரும்: 1978ல் மகேந்திரன் இயக்கிய படம் முள்ளும் மலரும். ரஜினிகாந்த், படாபட் ஜெயலட்சுமி, ஷோபா, சரத்பாபு உள்பட பலர் நடித்துள்ளனர். இளையராஜாவின் இசையில் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்ற சூப்பர்ஹிட் காதல் மெலடி பாடல் இந்தப் படத்தில்தான் வருகிறது. அடி பெண்ணே, ராமன் ஆண்டாலும், நித்தம் நித்தம் நெல்லுச்சோறு ஆகிய பாடல்களும் உள்ளன.