எம்ஜிஆருக்கும், கண்ணதாசனுக்கும் முட்டிக்கிச்சு... பஞ்சு கொடுத்த சூப்பர் பாடல்!

கண்ணதாசனுக்கும், எம்ஜிஆருக்கும் ஒரு கட்டத்தில் ஈகோ பிரச்சனை வந்து விடுகிறது. அப்போது எம்ஜிஆரின் படங்களுக்கு இனி பாட்டு எழுத மாட்டேன் என்று கவிஞர் சொல்லி விடுகிறார். அப்போது பஞ்சு அருணாசலத்தை எழுத வைக்கிறார் எம்ஜிஆர். அதுதான் அந்த சூப்பர்ஹிட் பாடல். டிஎம்எஸ்., சுசீலா பாடிய இந்தப் பாடல் பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பியது.
கலங்கரை விளக்கம் படத்தில் வரும் 'பொன்னெழில் பூத்தது புதுவானில்' என்ற இந்த பாடலை பிரபல தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலம் எழுதினார். இவர் இயக்குனர், எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறன் வாய்ந்தவர்.
இந்தப் 'பொன்னெழில் பூத்தது' பாடல் எப்படி உருவானதுன்னு பிரபல பின்னணிப் பாடகர் மனோ தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தயாரிப்பாளரும், திரைக்கதை ஆசிரியருமான பஞ்சு அருணாச்சலத்திடம் கேட்கிறார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். 'பொன்னெழில் பூத்தது' பாடல் அந்த சூழ்நிலையில தான் உருவானது.
அப்போது கட்சிப் பிரச்சனை. அதுல இருவருக்கும் இடையில் சில மனஸ்தாபம். சின்ன ஈகோ ஆகிப்போச்சு. அதனால் கண்ணதாசன் 'இனி எம்ஜிஆர் படங்களுக்குப் பாடல் எழுத மாட்டேன்'னு சொல்லி விடுகிறார். 'அவரு எழுதாவிட்டால் என்ன பஞ்சு அருணாசலத்தை எழுதச் சொல்வோம்' என எம்ஜிஆர் சொல்லி விடுகிறார்.
எம்எஸ்வி.தான் இசை அமைச்சாரு. டியூனைச் சொன்னாரு. அப்போ எனக்கு ஒரு நல்ல பல்லவி தோணுச்சு என்கிறார் பஞ்சு அருணாச்சலம். அதைத் தொடர்ந்து அவர் எம்எஸ்வியிடம் 'பல்லவியை நான் எழுதட்டுமா' என்று கேட்டுள்ளார்.
அதற்கு அவரும் சம்மதிக்கிறார். அப்போது உருவானதுதான் 'பொன்னெழில் பூத்தது புதுவானில். வெண்பனி தூவும் இளவேனில்' என்ற பாடல். அப்போ 'இளவேனில்' என்றால் தென்றல்னு அர்த்தம். அதில் 'இளவே'ன்னு வருது. அது துக்ககரமான வார்த்தை. மாற்றிக் கொடுன்னு சொன்னாரு. அப்புறம் 'நிலவே நில்'னு போட்டேன் என்கிறார்.
இங்கே எம்ஜிஆருக்கும், கண்ணதாசனுக்கும் ஈகோ பிரச்சனை என பஞ்சு அருணாச்சலம் சொல்கிறார். அதே நேரம் அதை எல்லாம் தாண்டித்தான் எம்ஜிஆர் முதல்வர் ஆனதும் கண்ணதாசனைத் தனது அரசவைக் கவிஞராக நியமித்தார் என்றால் அது எவ்வளவு பெரிய விஷயம் என எண்ணிப்பாருங்கள்.