இவருக்கா இந்த நிலைமை? மருத்துவமனையில் பார்த்து அதிர்ச்சியடைந்த எம்ஜிஆர்..

by Rohini |   ( Updated:2025-01-06 08:59:24  )
mgr
X

mgr

முதலமைச்சர் பதவியில் எம்ஜிஆர்:

1977 ஆம் ஆண்டு எம்ஜிஆர் முதலமைச்சரானார். 1981 ஆம் ஆண்டில் மதுரை பழக்கட பாண்டி என்பவரை பார்க்க மதுரை அரசு மருத்துவமனைக்கு செல்கிறார் எம்ஜிஆர். அங்கே போகும்போது காளிமுத்து எம்ஜிஆரிடம் ‘கக்கன் இங்கு தான் இருப்பதாக சொன்னார்’ என எம்.ஜி.ஆரிடம் கூறினார் காளிமுத்து. உடனே எம்ஜிஆர் எங்கே எங்கே என கக்கனை தேடுகிறார்.

கண்டே பிடிக்க முடியவில்லை. ஏனெனில் பழைய பாய், அவருடைய அருகில் ஆஸ்பத்திரியில் கொடுக்கக்கூடிய சாப்பாடு, அதுவும் அந்த சாப்பாடு ஈயத் தட்டில் அங்கே கொடுக்கப்பட்டிருக்கிறது. அங்கே இருந்த துப்புரவு பணியாளர் ‘ஐயா கக்கன் அங்கே இருக்கிறார். அந்த படுக்கையில் படுத்து இருக்கிறார்’ என கூறுகிறார். எம்.ஜி.ஆர் அங்கு போய் பார்த்தால் ஒரு பழைய பாயில் கோமணத்தை கட்டிய படி படுத்து தூங்கிக் கொண்டிருக்கிறார் கக்கன்.

இவருக்கா இந்த நிலைமை?

பிஞ்சு போன ஒரு தலையணை. எம்ஜிஆர் முதலமைச்சர் என்பதால் அங்கு இருந்த மருத்துவமனை டீன், பெரிய அதிகாரிகள் எல்லாம் அங்கு கூடி விட்டார்கள். எம்ஜிஆர் அங்கு அமர்வதற்கு ஒரு மர நாற்காலியை கொண்டு போடுகிறார்கள். கக்கனை பார்த்து எம்ஜிஆர் பேசுகிறார், ‘ ஐயா உங்களுக்கு என்ன வேண்டும்’ என கேட்கிறார் எம்ஜிஆர். அதற்கு கக்கன் ‘எனக்கு ஒன்றுமே வேண்டாம். ஒரு நல்ல பாயும் ஒரு பெட்ஷீட்டும் வாங்கி கொடு’ என கேட்கிறார்.

அதைக் கேட்டதும் கண்ணாடி அணிந்திருந்த எம்.ஜி.ஆர் கண்களில் இருந்து தண்ணீர் மளமளவென பெருக்கெடுத்து வருகிறது. ஆனால் எம்ஜிஆர் ‘ இல்லை உங்களை நான் சிறப்பு வார்டுக்கு மாற்ற சொல்கிறேன்’ எனக் கூற அதற்கு கக்கன் ‘சிறப்பு வார்டு எல்லாம் வேண்டாம். எல்லாராலயும் சிறப்பு வார்டு எல்லாம் போக முடியாதுப்பா, எனக்கு நல்ல பாயும் பெட்ஷீட் இருந்தால் போதும்’ என கூறினாராம்.

யார் அந்த கக்கன்?

நீ வந்து பார்த்துவிட்டு போயிட்ட, இனிமே எல்லாரும் என்னை வந்து பார்த்து விடுவான் என கூறினாராம் கக்கன். எப்படி இயல்பாக இருக்கிறார் பாருங்கள் கக்கன் என அரசியல் விமர்சகர் பாண்டியன் இந்த பதிவை ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். சரி யார் அந்த கக்கன்? ஒரு விடுதலைப் போராட்ட வீரர், இந்திய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் குழுவின் தலைவர்.

kakkan

இன்னும் பல இதர பொறுப்புகளை வகித்தவர். காங்கிரஸ் அரசாங்கத்தில் இவர் ஒரு அரசியல்வாதி. இவர் மீது அதிக அளவு பற்று கொண்டவர் எம்ஜிஆர். இவருடைய நிலைமைக்கு பிறகு தான் எம்ஜிஆர் எம்எல்ஏக்களுக்கு எல்லாம் பென்ஷன் என்ற ஒரு புதிய விதிமுறையை கொண்டு வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story