எம்ஜிஆர் தயாரித்த படங்கள் லிஸ்ட்... ஜெயலலிதாவுக்கு வந்த கோபம்

By :  SANKARAN
Published On 2025-07-20 21:26 IST   |   Updated On 2025-07-20 21:26:00 IST

முதலாவதாக எம்ஜிஆர் பிக்சர்ஸ் சார்பில் 1958ல் வெளியான படம் நாடோடி மன்னன். முதன் முதலில் இயக்கிய படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. 150 நாளுக்கு மேல் ஓடி வெற்றி பெற்ற படம். மதுரை தங்கம் தியேட்டரில் 120 நாள்கள் ஓடி சாதனை செய்த படம். சரோஜாதேவி எம்ஜிஆருடன் நடித்த முதல் படம். பாதி கருப்பு வெள்ளை, பாதி கலர் என எடுத்த படம். எஸ்எம்.சுப்பையா நாயுடு இசையில் சூப்பர்ஹிட் பாடல்கள் உள்ளன.

இரண்டாவதாக எம்ஜிஆர் தயாரித்த படம் அடிமைப்பெண். இது 1969ல் வெளியானது. இந்தப் படத்தை கே.சங்கர் இயக்கினார். கே.வி.மகாதேவன் இசை அமைத்தார். பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்டது. எம்ஜிஆரும், ஜெயலலிதாவும் இரட்டை வேடத்தில் நடித்தனர்.

மிகப்பெரிய வெற்றிப்படம். சிறந்த பாடல்கள் இடம்பெற்றன. எம்ஜிஆருக்காக எஸ்பிபி முதன் முதலாக குரல் கொடுத்த ஆயிரம் நிலவே வா பாடல் இடம்பெற்ற படம். அதிக வசூல் சாதனை பெற்ற படம்.


உலகம் சுற்றும் வாலிபன் படம் 1973ல் வெளியானது. எம்ஜிஆர் தயாரித்தார். இரட்டை வேடங்களில் நடித்தார். வெளிநாடுகளில் எடுக்கப்பட்ட படம். பிரம்மாண்டமான பொருள்செலவில் எடுக்கப்பட்டது. நீண்ட நாள் தயாரிப்பில் இருந்தது. எம்ஜிஆருடன் மஞ்சுளா, லதா, சந்திரகலா உள்பட பலர் நடித்தனர். இந்தப் படத்தில் வாய்ப்பு கொடுக்காதது ஜெயலலிதாவுக்கு ரொம்ப வருத்தத்தை உண்டாக்கியது. எம்எஸ்வி.யின் இசையில் பாடல்கள் சூப்பர். அதிக நாள்கள் ஓடி சாதனை படைத்தது. எம்ஜிஆர் இயக்கிய 2வது படம் இது.

எம்ஜிஆர் தயாரித்த 4வது படம் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன். எம்ஜிஆர் இயக்கிய படம். அவருடன் லதா ஜோடியாக நடித்தார். எம்ஜிஆர் முதல்வர் ஆன பிறகு நடித்த படம். 1978ல் வெளியானது. மன்னர் காலத்துப் படமாக இருந்ததால் மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் வெற்றி பெறவில்லை. 75 நாள்கள் ஓடியது. எம்எஸ்வி.யின் இசையில் பாடல்கள் சுமார் ரகம். எம்ஜிஆர் நடித்த கடைசி படம்.

Tags:    

Similar News