ஒத்த ரூபா தாரேன் பாட்டு... இளையராஜாவிடம் வாங்குவதற்கு அவரு கடும்பாடு பட்டாராமே!

by SANKARAN |   ( Updated:2025-05-20 07:53:56  )
kushboo, ilaiyaraja
X

இளையராஜாவும், கஸ்தூரி ராஜாவும் பக்கத்து பக்கத்து ஊர்க்காரங்க. ஊர் பாசம் வேற. அதனால தான் இளையராஜா பயோபிக்ல தனுஷ் நடிக்க அவரே அனுமதிச்சாராம். நாட்டுப்புறப்பாட்டு படத்தில் வரும் 'ஒத்த ரூபா தாரேன்' பாடல் எப்படி உருவானதுன்னு தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா சில தகவல்களைச் சொல்கிறார். என்னன்னு பாருங்க.

என் ராசாவின் மனசிலே படம் இளையராஜாவின் இசையில் உருவானது. அப்புறம் தொடர்ச்சியா தேவா தான் மியூசிக் டைரக்டர். ஆனா எனக்கு ஒரு பாடல் ஆசிரியரா இளையராஜா மியூசிக்ல பாட்டு எழுதணும்னு ரெண்டு மூணு தடவை அவரு ஸ்டுடியோவுக்குப் போனேன். அப்போ அவரைப் பார்க்கவே முடியல. 'மத்த படத்துக்கு நீ ஏன் பாட்டு எழுதுற'ன்னு என்னை அனுப்பி விட்டாரு.

அப்போ அவருக்கிட்ட ஒரு ஆப்ஷனை வச்சேன். 'நான் ஒரு சொந்தப் படம் எடுக்குறேன். நீங்க தான் மியூசிக் பண்ணித் தரணும். நான் பாட்டு எழுதுறேன்'னு சொன்னன். அதுக்கு இளையராஜா 'எடுய்யா'ன்னு சொல்லிட்டாரு.

அப்போ தேனி பக்கத்துல நாட்டுப்புற திருவிழா நடந்தது. நானும் நண்பர்களும் போனோம். மக்கள் கூட்டம் அலைமோத திருவிழா கோலாகலமா நடந்தது. அப்போ 'ஒத்த ரூபா தாரேன்' மெட்டுல வேற ஒரு டம்மி வரியைப் போட்டு அங்குள்ள நாட்டுப்புறக் கலைஞர்கள் பாடி ஆடிக்கிட்டு இருந்தாங்க.


எனக்கு அப்போ தோன்றிய வரி தான் 'ஒத்த ரூபா தாரேன். ஒனப்பத் தட்டும் தாரேன்'னு வரியையும் ரெடி பண்ணிட்டேன். இளையராஜாவிடம் போய் சொன்னேன். அதுக்கு அவரு இதை யாரோ பாடிட்டாங்க. நான் ஃப்ரஷா மியூசிக் பண்ணித் தாரேன்னு சொன்னாரு. அந்த டியூனை வேணாம்னுட்டாரு. கிட்டத்தட்ட 1 வாரம் போராடி நான் அந்தப் பாட்டை வாங்கினேன்னு சொல்கிறார் தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா.

நாட்டுப்புறப்பாட்டு வெற்றிக்கு மிகப்பெரிய காரணம் அந்தப் பாட்டு தான். அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அந்தப் பாட்டை முதல்ல மறைந்த ஸ்ரீவித்யாவை வச்சி எடுக்க நினைச்சோம். அப்புறம் குஷ்பூ முடிவானார். அப்போ எங்கிட்ட காசு இல்லன்னதும் குஷ்பூ 'நான் மறுநாள் வெளிநாடு போறேன். நீங்க ஒரு நாள் முழுக்க பாட்டை எடுங்க'ன்னு சொன்னாராம்.

அதனால் 36 மணி நேரம் அந்தப் பாடலை எடுத்து முடித்தாராம் கஸ்தூரி ராஜா. அப்படி இருக்கும்போது குட் பேட் அக்லியில் அந்தப் பாடலைப் பயன்படுத்தும்போது எங்கிட்ட ஒரு வார்த்தைக் கேட்டுருக்கலாமே. எனக்கான அங்கீகாரத்தை ஏன் கொடுக்கலன்னு ஆதங்கப்படுகிறார். 1996ல் நாட்டுப்புறப்பாட்டு படத்தை தயாரித்து இயக்கியவர் கஸ்தூரி ராஜா.

Next Story