தோல்வியில் துவண்ட நிறுவனம்... வேற வழியே இல்லை... தயாரிப்பாளர் செய்த உத்தி

by Sankaran |   ( Updated:2025-01-10 03:30:53  )
vallavanuku vallavan, chitranki
X

மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபரான டி.ஆர்.சுந்தரம் மறைவுக்குப் பின்னால சித்ராங்கி, அம்மா எங்கே என்ற 2 திரைப்படங்களைத் தயாரித்தது. அவை இரண்டுமே மிகப்பெரிய தோல்விப்படங்களாக அமைந்தது.

மாடர்ன் தியேட்டர்ஸ்: அடுத்து இந்த ஸ்டூடியோவை நடத்துவது யார் என தொழிலாளர்கள் மத்தியில் கேள்வி எழுந்தது. மாடர்ன் தியேட்டர்ஸ் அதிபர் டி.ஆர்.சுந்தரத்தின் மகனான ராமசுந்தரம் நிர்வாகப் பெறுப்புகளை ஏற்றுக்கொண்டார்.


அட்டைப்பெட்டி தொழிற்சாலை: அந்தக்காலத்தில் ஒரு அட்டைப்பெட்டி தொழிற்சாலை வைக்க வேண்டும் என்பதில் தான் ராம்சுந்தர் குறிக்கோளாக இருந்தார். ஆனால் தொழிலாளர்கள் வைத்த கோரிக்கையை உடனடியாக ஏற்றுக்கொண்டார். உடனடியாக ஒரு வெற்றிப்படத்தைக் கொடுத்தால்தான் தலைநிமிர்ந்து நிற்க முடியும் என்பதைப் புரிந்து கொண்டார்.

இந்திப் பட உரிமை: டி.ஆர்.சுந்தரம் ஏற்கனவே 'உஸ்தாதோன் கே உஸ்தாது' என்ற இந்திப் படத்தின் உரிமையை தமிழில் தயாரிப்பதற்காக வாங்கி வைத்து இருந்தார். அந்தப் படத்தைப் போட்டுப் பார்த்தார். அந்தப் படத்தைத் தமிழில் எடுத்தால் நிச்சயம் வெற்றிப்படமாக அமையும் என்று அவருக்குத் தெரிந்தது.

ஹீரோவான அசோகன்: ராம்சுந்தரம் எந்தப் படத்தையும் இயக்கியது இல்லை. அதனால் எடிட்டர் பாலுவைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு இவர் இயக்கினார். அதுதான் வல்லவனுக்கு வல்லவன் என்ற படம். இந்தப் படத்தில் கதாநாயகன் அசோகன், கதாநாயகி மணிமாலா.

அந்தப் படம் பெரிய வெற்றிப்படமாக அமைந்து மாடர்ன் தியேட்டர்ஸை தலைநிமிர வைத்தது. தொடர்ந்து அந்த ஸ்டூடியோவில் பல படங்களின் படப்பிடிப்புகள் நடந்தன. மேற்கண்ட தகவலை பிரபல தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

வல்லவனுக்கு வல்லவன்: 1965ல் வெளியான படம் வல்லவனுக்கு வல்லவன். இந்தப் படத்தை மாடர்ன் தியேட்டர்ஸ் நிறுவனம் தயாரித்தது. ஆர்.சுந்தரம் இயக்கியுள்ளார். படத்தில் அசோகன், மணிமாலா, மனோகர், சாவித்ரி, ராமதாஸ் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்தப் படத்தில் எம்ஜிஆர் படங்களில் வில்லனாக நடித்த அசோகன் தான் ஹீரோவாக நடித்திருந்தார்.

அப்போது ஹீரோவை வில்லனாக நடிக்க வைப்பதும், வில்லனை ஹீரோவாக நடிக்க வைப்பதும் கிடையாது. தவிர்க்க முடியாத சூழலில் ஒரு சில படங்களில்தான் நடக்கும். அதே போல இந்தப் படத்தில் வில்லன் அசோகன் தான் ஹீரோவாக நடித்து அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தப் படம் வந்த சமயத்தில் எம்ஜிஆரும் வளர்ந்து வந்து கொண்ட நடிகராக இருந்தார். எங்க வீட்டுப்பிள்ளை, ஆயிரத்தில் ஒருவன் ஆகிய சூப்பர்ஹிட் படங்கள் இந்தக் காலகட்டத்தில்தான் வந்தன.

Next Story