சவாலான படம்.. 90ஸ் ஹீரோக்கள் நோ சொல்ல துணிந்து இறங்கிய பார்த்திபன். என்ன படம் தெரியுமா?

by Rohini |
karthick
X

பார்த்திபன் என்னும் சிறந்த படைப்பாளி: தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் பார்த்திபன். வார்த்தை வித்தகன், புதுமைப்பித்தன் என்றெல்லாம் இவரை குறிப்பிடலாம். வார்த்தையில் அவருக்கே உரிய ஜாலத்தை பயன்படுத்தி எதிர் இருப்பவர்களை ஆச்சரியப்படுத்துபவர். கவிதை நடையில் பேசுவதில் ஒரு சிறந்த கவிஞர். சில நேரம் இவரிடம் மாட்டிக் கொண்டு முடித்தவர்கள் ஏராளம்.

மைக்கை கொடுத்தால் போதும் வாயிலிருந்து கவிதைகள் கொட்டோ கொட்டோ என கொட்டும். ஒரு சிறந்த படைப்பாளியும் கூட. கமல் எந்த அளவுக்கு சினிமாவிற்காக புதுப்புது முயற்சிகளை எடுத்து வருகிறாரோ அதைப்போல பார்த்திபனும் தன்னுடைய புதுமையான முயற்சிகளால் தன்னுடைய படைப்புகளின் மூலம் தமிழ் சினிமாவை அடுத்த லெவலுக்கு கொண்டு போக வேண்டும் என்று முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்.

புதிய பாதை உருவாக்கம்: இந்த நிலையில் இவர் நடித்த ஒரு படத்தில் 90களில் நாயகனான பிரபு, முரளி ,அர்ஜுன், மோகன் ,கார்த்திக் என எத்தனையோ நடிகர்களிடம் இந்த படத்தின் கதை சென்று அவர்களால் நடிக்க முடியாத சூழ்நிலை உருவாகி அதன் பிறகு பார்த்திபன் நடித்து பல விருதுகளை பெற்றிருக்கிறது. அது வேற எந்த படமும் இல்லை .புதிய பாதை திரைப்படம் தான். இந்த படத்தை இயக்கியவரும் பார்த்திபன் தான்.

இந்த படம் வெளிவந்த வருடத்தில் சிறந்த திரைப்படத்திற்கான தேசிய விருதை இந்த படம் பெற்றது. அதைப்போல மாநில அரசின் விருதுகளையும் இந்த படம் வென்றது. இந்த படத்தை பற்றி கூறும்பொழுது இது ஒரு சாதாரண கதைதான். இந்த கதையை கொண்டு போய் மோகன், பிரபு ,கார்த்திக், சத்யராஜ் என பல பேரிடம் கேட்டேன். யாரும் நடிக்க முடியாது என சொல்லிவிட்டார்கள்.

நடிக்கும் ஆசையில்: அதன் பிறகு சினிமாவிற்கு வருவதற்கு முன் பல நாடகங்களில் நடித்து அனுபவம் பெற்றவன் நான். முதலில் நடிக்க வேண்டும் என்றுதான் இந்த சினிமாவிற்குள் வந்தேன். அதற்கே முதலில் எனக்கு தகுதி கிடையாது .இருந்தாலும் பாக்யராஜிடம் உதவியாளராக சேர்ந்ததினால் ஒரு படத்தை எப்படி இயக்குவது என்பதையும் தெரிந்து கொண்டேன். அதன் பிறகு தான் இந்த படத்தில் நானே நடித்தால் எப்படி இருக்கும் என யோசித்து தான் நடித்தேன்.

அந்த நேரத்தில் தயாரிப்பாளர் பாபுஜி ரஜினியை வைத்து ஒரு படத்தை தயாரிக்க வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருந்தார். ஆனால் ரஜினியின் கால் சீட் அவருக்கு கிடைக்கவில்லை .அந்த நேரத்தில் தான் என்னிடம் வந்து நீயே இந்த படத்தில் நடி, நான் தயாரிக்கிறேன் என கூறியதன் விளைவாகத்தான் புதிய பாதை என்ற திரைப்படம் உருவானது என பார்த்திபன் கூறினார்.


இந்தப் படத்தில் பல சவால்கள் இருந்தன. ஏனெனில் படத்தின் கரு என்னவெனில் ஒரு தீயவனை ஹீரோவாக்கும் திரைப்படம் இது. படம் முழுக்க கெட்டவனாகவே காட்டப்பட்டிருப்பார் பார்த்திபன். கிளைமாக்ஸில் தான் ஹீரோவாக மக்கள் மத்தியில் காணப்படுவார். இப்படியும் ஒரு மோசமான கேரக்டரா என்ற அளவுக்கு பார்த்திபன் கேரக்டர் இந்த படத்தில் இருக்கும். தன்னுடைய ஆசைக்காக மற்றவர்களை துன்புறுத்துவது போன்ற பல சவாலான காட்சிகள் இந்த படத்தில் அமைந்திருக்கும். ஆனால் தேசிய விருதை வெல்லும் என யாருமே எதிர்பார்க்கவில்லை.

Next Story