ஃபர்ஸ்ட் நாள் ஷூட்டிங் போகவே மாட்டாரு.. ரகுவரன் பற்றி மேக்கப் ஆர்ட்டிஸ்ட் சொன்ன சீக்ரெட்
ரகுவரன்:
தமிழ் சினிமாவில் சிறந்த வில்லன்கள் என்ற லிஸ்ட்டில் கண்டிப்பாக இடம்பெறுபவர் நடிகர் ரகுவரன். ரசிகர்கள் மனதில் என்றும் நிலைத்து நிற்பவர். ஹீரோவாக சினிமாவில் அறிமுகமான ரகுவரன் ஹீரோவாக நடித்த அனைத்து படங்களுமே வெற்றிப்படங்களாக அமைந்தன. சினிமாவில் ஒரு சகாப்தம் என்றே ரகுவரனை குறிப்பிடலாம். கைநாட்டு, மைக்கேல் ராஜ், கூட்டுப் புழுக்கள், குற்றவாளி போன்ற படங்கள் இவர்கள் ஹீரோவாக நடித்த படங்களாகும்.
ஆனால் பெரிதாக ஹீரோவாக அவரால் ஜெயிக்க முடியவில்லை. அதன் பின் வில்லனாக நடிக்க தொடங்கினார். தமிழ் மட்டுமில்லாமல் தெலுங்கு, மலையாளம் போன்ற பிறமொழிப் படங்களிலும் நடித்து ஒட்டுமொத்த சினிமா துறைக்கும் ஒரு தவிர்க்க முடியாத நடிகராக மாறினார். ஹீரோ, வில்லன் என தொடர்ந்து மாஸ் காட்டிய ரகுவரன் குணச்சித்திர வேடங்களிலும் பட்டையை கிளப்பினார்.
கருத்துவேறுபாடு:
அப்பா, அண்ணன் என இரண்டு கதாபாத்திரங்களுக்கும் கணக்கச்சிதமாக பொருந்தினார் ரகுவரன். நடிகை ரோகிணியை காதலித்து திருமணம் செய்து கொண்ட ரகுவரனுக்கு ஒரு ஆண் மகன் இருக்கிறார். ஆனால் ரகுவரனுக்கும் ரோகிணிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். இவர் திரையுலகில் உச்சத்தில் இருந்தாலும் மது பழக்கத்திற்கு ஆளானார்.
அதனால் உடல் நலக் குறைவு ஏற்பட்டு அடிக்கடி சிகிச்சை மேற்கொண்டு வந்தார் ரகுவரன். ரஜினி ஒரு பேட்டியில் என்னுடைய ஆஸ்தான வில்லன் என்றால் அதில் ரகுவரனுக்கு கண்டிப்பாக இடம் இருக்கும் என்று கூறியிருந்தார். ஒரு படத்தில் கமிட் ஆகிறார் என்றால் அந்தப் படத்திற்காக தன்னை தயார்படுத்துவது எந்த நடிகர்களும் இதுவரை அப்படி இருந்ததில்லை.
தயார்படுத்தும் விதம்:
முரட்டுத்தனமான வில்லன் கதாபாத்திரம் என்றால் வீட்டில் யாருடனும் பேசாமல் கோபத்துடனேயே இருப்பது, வீட்டில் உள்ளவர்களிடம் எரிச்சலை கக்குவது என கிட்டத்தட்ட ஒரு சைக்கோ மாதிரி ஆகிவிடுவார். ரகுவரன் எப்போதுமே ஒரு படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கை கேன்சல் செய்துவிடுவாராம். வர்றேன் என்று சொல்வாராம். ஆனால் முதல் நாள் போகவே மாட்டாராம்.
என்ன காரணம் என்பதை அவருடைய மேக்கப் ஆர்ட்டிஸ்ட் கிருஷ்ண ராவ் கூறினார். பாசில் இயக்கத்தில் சத்யராஜ் நடித்த படம் பூவிழி வாசலிலே. இந்தப் படத்தில் கைத்தடியுடன் கொஞ்சம் தத்தி தத்தி நடப்பது மாதிரியான கேரக்டரில் ரகுவரன் நடித்திருப்பார். இந்தப் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கிற்கு போகவில்லையாம். அதற்கு காரணம் கைத்தடி வாங்குவதற்காக ரோட்டோரத்தில் இருக்கும் கடையில் வாங்கிக் கொண்டிருந்தாராம்.
பின் அதை வைத்து நாள் முழுக்க பயிற்சி எடுப்பாராம். இதனாலேயே ஃபர்ஸ்ட் நாள் ஷூட்டிங் பெரும்பாலும் ரகுவரன் போகமாட்டார் என கிருஷ்ணராவ் கூறினார்.