எனக்கு இது செட்டே ஆகாது!. ரஜினி நடிக்க தயங்கிய படம்!.. அட அந்த சூப்பர் ஹிட் படமா?!..
Rajinikanth: ஒரு இயக்குனர் ஒரு நடிகருக்கு கதை சொல்வார். அந்த கதை பிடித்திருந்தால் அந்த நடிகர் நடிக்க சம்மதிப்பார். சில சமயம் இயக்குனர்களின் மீதுள்ள நம்பிக்கையில் ஒரு நடிகர் ஒரு படத்தில் நடிக்க சம்மதிப்பார். ஒரு வரியில் மட்டும் கதை கேட்பார்கள். சில நடிகர்கள் முழுக்கதையையும் கேட்டுவிட்டே நடிக்க சம்மதிப்பார்கள். இது மாறுபடும்.
எஸ்.பி.முத்துராமன் இயக்கத்தில் 25க்கும் மேற்பட்ட படங்களில் ரஜினி நடித்தார் என்றால் அது இயக்குனரின் மீது உள்ள நம்பிக்கைதான். அப்படி அவர் நடித்த பெரும்பலான படங்களை கதை, வசனம் எழுதி தயாரித்தவர் பஞ்சு அருணாச்சலம்தான். அவர்தான் ரஜினியை ஜனரஞ்சக நடிகராக மாற்றினார்.
இயக்குனர் பாலச்சந்தரே ‘ரஜினியை நான் அறிமுகம் செய்திருக்கலாம். ஆனால், அவரை ஒரு ஸ்டாராக மாற்றியது பஞ்சு அருணாச்சலம்தான்’ என சொல்லி இருக்கிறார். ரஜினிக்கு முதலில் ஒரு லட்சத்தை சம்பளமாக கொடுத்தவர் பஞ்சு அருணாச்சலம்தான். பிரியா படத்தில் அது நடந்தது.
ரஜினியின் திரை வாழ்வில் சில படங்களில் நடிக்கும்போது ‘இது நமக்கு செட் ஆகுமா?.. இந்த படம் வெற்றி பெறுமா?’ என்கிற சந்தேகம் ரஜினிக்கே வந்திருக்கிறது. ‘இந்த படத்திலிருந்து விலகி விடலாமா’ என்றெல்லாம் கூட அவர் யோசித்திருக்கிறார். ஆனால், அப்படி அவர் யோசித்த படங்கள் சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது.
ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ராஜாதி ராஜா`படம் கூட நடிக்கும்போது ரஜினிக்கு பிடிக்கவில்லை. சுந்தர்ராஜனுக்கும், ரஜினிக்கும் இடையே சின்க் ஆகவில்லை. இந்த படம் ஓடாது என்றே ரஜினி நடித்திருக்கிறார். ஆனால், அந்த படம் சூப்பர் ஹிட் அடித்து ரஜினியையே ஆச்சர்யப்படுத்தியது.
அதேபோல், பஞ்சு அருணாச்சலம் கதை, வசனம் எழுதி ராஜசேகர் இயக்கத்தில் ரஜினி நடித்த படம்தான் ‘தம்பிக்கு எந்த ஊரு’. இந்த படத்தில் ரஜினியுடன் செந்தாமரை, மாதவி, சுலக்ஷனா உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த படத்தின் 90 சதவீத படப்பிடிப்பு கிராம பகுதிகளில் நடந்தது. பஞ்சு அருணாச்சலம் கேட்டதால் அந்த படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார் ரஜினி.
ஆனால், படப்பிடிப்பு சில நாட்கள் நடந்த பின் ’ஏதோ லவ் ஸ்டோரின்னு சொன்னீங்க.. ஆனா, காட்டுக்குள்ள வேலை பார்க்க விடுறீங்க.. எனக்கு இது செட் ஆகுமான்னு தெரியல’ என சொல்ல, பஞ்சு அருணாச்சலம் ‘நஷ்டமானா எனக்குதான் ஆகும். நீ தைரியமா நடி. நான் பாத்துக்கிறேன்’ என சொல்லியிருக்கிறார். அப்படி ரஜினி நடித்து வெளியான ‘தம்பிக்கு எந்த ஊரு’ படம் சூப்பர் ஹிட் அடித்தது. 70 கிட்ஸ்களின் ஃபேவரைட் காதல் பாடலான ‘காதலின் தீபம் ஒன்று’ பாடல் இந்த படத்தில்தான் இடம் பெற்றிருந்தது.