நன்றிக்கடனுக்கு ஒரு உதாரணம்தான் ரஜினி... அட இப்படி எல்லாமா செய்தாரு?

By :  SANKARAN
Update: 2025-05-08 17:50 GMT

இன்னைக்கு இந்த வயசிலும் ரஜினி 175, 176ன்னு படங்கள் நடிச்சிக்கிட்டே இருக்காரு. அதே நேரம் சினிமாவுல சுமார் 50 ஆண்டுகளாக நடிச்சிக்கிட்டு இருக்காரு. அவரு கதாநாயகனா நடிச்ச முதல் படம் பைரவி. அன்று முதல் இன்று வரை அவர் ஹீரோவாகத் தான் நடிக்கிறாரு. இன்னைக்கும் அவருதான் உச்சநட்சத்திரமா ஜொலிக்கிறாரு.

ஆரம்பத்துல எவ்வளவோ கஷ்டப்பட்டாரு. எத்தனையோ அவமானங்களை சந்திச்சாரு. இன்னைக்கு கோடி கோடியா சம்பாதிக்கிறாரு. ஆனாலும் அவரு எப்பவுமே எளிமையாகத் தான் இருக்காரு. எல்லா நடிகர்களிடமும் அன்பொழுக பேசுகிறார். அவருக்கு யாராவது ஒருத்தர் உதவி செய்தால் அதை என்றைக்குமே மறக்க மாட்டார். அதுக்கு ஒரு சிறு உதாரணம்தான் இந்த சம்பவம். வாங்க பார்க்கலாம்.

ரஜினி இன்னைக்கு எத்தனையோ படங்கள்ல நடிச்சிட்டாரு. இன்னும் நடிச்சிக்கிட்டு இருக்காரு. ஆனாலும் அன்னைக்கு புதுப்பேட்டை அதாவது மியூசிக் அகாடமி பின்னாடி பேச்சிலரா இருந்தபோது ஒரு கஷ்டப்பட்ட கதாசிரியர் தன்னோட மனைவி நகைகளை விற்று அந்த நேரத்துல பத்தாயிரமோ, பதினைஞ்சாயிரமோ அட்வான்ஸ் பணமா வச்சி 'தம்பி இந்தப் படத்துல இன்னைக்கு நீங்க ஹீரோவா நடிக்கிறீங்க' அப்படின்னு சொன்ன உடனே சொன்னதுக்கே ரஜினிக்கு 'பக்'குன்னு ஆகிப்போச்சாம்.

சார் நான் ஹீரோவான்னு ஆச்சரியத்துடன் கேட்க, ஆமா தம்பி நீங்க ஹீரோ. எனக்காக கால்ஷீட் கொடுங்க. இதை அட்வான்ஸா வச்சிக்கோங்கன்னு கொடுத்தார். அப்படி கொடுத்தவர் தான் பைரவி படத்தோட தயாரிப்பாளர் கலைஞானம்.

அந்தப் படத்துல தான் ரஜினி ஹீரோவா அறிமுகம் ஆகுறாரு. ஆனா கலைஞானத்துக்கு ஒரு கட்டத்தில் வீடே இல்லன்னு இருந்தபோது ரஜினி சாலிகிராமத்துல வீடு வாங்கிக் கொடுத்தாரு. என்ன காரணம்னா அன்னைக்கு நாம அப்படி இருந்தபோது நம் மேல ஒரு நம்பிக்கை வச்சி ஹீரோவா ஆக்கிருக்காரு. அந்த நன்றிக்கடன் தான். 


1978ல் எம்.பாஸ்கர் இயக்கத்தில் கலைஞானம் தயாரிப்பில் ரஜினி நடித்த படம் தான் பைரவி. ஜோடியாக ஸ்ரீபிரியா நடித்தார். ஸ்ரீகாந்த், சுருளிராஜன், மனோரமா உள்பட பலரும் நடித்துள்ளனர். இந்தப் படத்துக்கு இளையராஜா இசை அமைத்துள்ளார். பாடல்கள் எல்லாமே சூப்பர்ஹிட். ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. ரஜினிக்கு இந்தப் படத்தில் இருந்தே சூப்பர்ஸ்டார் பட்டமும் கொடுக்கப்பட்டது.

Tags:    

Similar News