அஜித்துக்கு அட்வைஸ் பண்ணி மாஸ் ஹீரோவா மாற்றிய ரஜினி... இது எப்போ நடந்தது?

By :  SANKARAN
Published On 2025-07-18 11:43 IST   |   Updated On 2025-07-18 11:43:00 IST

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அஜித்துக்கு அட்வைஸ் பண்ணிய சம்பவம் குறித்து பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு சில தகவல்களைப் பகிர்ந்துள்ளார். என்ன சொல்றாருன்னு பாருங்க.

பல வருடங்களுக்கு முன் அஜித்துக்கு அறிவுரை கூறியதும் ரஜினி தான். ஒரு தடவை கலைஞர் அய்யாவோட விழாவில் நடிகர்களை எல்லாம் மிரட்டிக் கூப்பிடுறாங்கன்னு அஜித் பேச, உடனே ரஜினி அஜித்தைக் கூப்பிட்டுப் போய் அட்வைஸ் பண்ணி கலைஞர் அய்யா கிட்ட மன்னிப்பு கேட்க வச்சு காம்ப்ரமைஸ் பண்ணி வச்சாரு. ரஜினி தான் ஆரம்பகாலகட்டத்துல மனசுல பட்டதெல்லாம் பட் பட்னு பேசுவாரு. அதே மாதிரி அஜித்தும் பேசிக்கிட்டு இருந்தாரு.

நீங்க இப்படி பண்ணாதீங்க. மனசுல பட்டதை எல்லாம் பட் பட்னு பேசிக்கிட்டு இருக்காதீங்க. நீங்க ஒரு பிரபல நடிகரா மாறிக்கிட்டு இருக்கீங்க. உங்களை பெரிய சர்ச்சைக்கு ஆளாக்கிருவாங்க. வேண்டாம். நீங்க பேச்சைக் குறைச்சிக்கோங்க. நான் கூட ஒரு காலத்துல இப்படித்தான் இருந்தேன். அப்படின்னு அட்வைஸ் கொடுத்தது எல்லாம் ரஜினி தான்.

அதே மாதிரி நீங்க ஒரு பெரிய வெற்றி கொடுக்கணும். எல்லாரும் திரும்பிப் பார்க்கணும். நீங்க பில்லா படத்தை வாங்கி ரீமேக்ல நடிங்கன்னு சொன்னதும் ரஜினி தான். இன்னொரு நடிகர். அவரு பெரிய ஆளா நமக்குப் போட்டியா வந்துடுவாருன்னு எல்லாம் நினைக்க மாட்டாரு. மத்தவங்களும் நல்லாருக்கணும்னு நினைக்கிற நடிகர்தான் ரஜினி. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


2007ல் பில்லா படத்தில் அஜித் நடித்தார். அஜித், நமிதா, நயன்தாரா, பிரபு உள்பட பலர் நடித்தனர். இந்தப் படத்தை இயக்கியவர் விஷ்ணுவர்த்தன். யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்துள்ளார். படத்தில் அஜித் மிகவும் ஸ்டைலிஷாக நடித்து அசத்தினார். ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அஜித் இரட்டை வேடத்தில் நடித்துக் கலக்கினார். ரஜினிகாந்த் நடித்த பில்லா படத்தில் இருந்து 2 பாடல்கள் இடம்பெற்றன. மை நேம் இஸ் பில்லா, வெத்தலைய போட்டேன்டி ஆகிய பாடல்கள் தூள் கிளப்பின. அது தவிர இந்தப் படத்தில் ஸ்டைல் லுக்கும், தீம் மியூசிக்கும் பட்டையைக் கிளப்பி அஜித்தை மாஸ் ஹீரோவாகக் காட்டியது. 

Tags:    

Similar News