இதனாலதான் நான் இன்னும் உயிரோட இருக்கேன்.. கமலிடம் சிவாஜி சொன்னதன் பின்னணி
நடிப்புக்கு ராஜா: தமிழ் சினிமாவில் நடிப்புனா இதுதான் என அனைவருக்கும் புரிய வைத்தவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன். இவருடைய ஒவ்வொரு படங்களுமே பொக்கிஷமாக பாதுகாக்கப்படக் கூடியவை. சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு வரும் ஒவ்வொரு இளைஞரும் சிவாஜியின் படங்களை பார்த்தாலே புரியும். நடிப்புனா என்னவென்பது புரிந்துவிடும். சினிமாவிற்கு ஒரு அடையாளமாக இருந்தார் சிவாஜி.
எல்லாவற்றையும் தொட்டு சென்றவர்: வரலாற்று படங்கள், புராணப் படங்கள், தேசத்தலைவர்களின் வாழ்க்கை வரலாறு, செண்டிமெண்ட் படங்கள் என அனைத்திலும் இவருடைய பங்கு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. யாருமே வீரபாண்டிய கட்டபொம்மனை பார்த்திருக்க மாட்டோம். அதை நம் கண் முன் நிறுத்தியவர் சிவாஜி. கட்டபொம்மன்னா இப்படித்தான் இருப்பாரோ என்ற ஒரு புது அடையாளத்தை மக்களுக்கு கொடுத்தார்.
புகழ்ச்சி வேண்டும்: கர்ணனை கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார். வீர வசனங்களை பேசி அனைவர் நெஞ்சத்திலும் ஒரு வீர வேட்கையை ஏற்படுத்தக் கூடிய திறமை இவரது நடிப்பில் இருக்கும். இப்படி சிவாஜியை பற்றி பேசவேண்டுமென்றால் பேசிக் கொண்டே போகலாம். சிவாஜியை பொறுத்தவரைக்கும் அவரை புகழ்வது என்பது மிகவும் பிடித்தமான ஒன்றாம். ஒரு கலைஞருக்கு வேற என்ன வேண்டும்? ஒரு சமயம் சிவாஜியை கமல் புகழ்ந்து பேச அவர் அறியாமலேயே கமலுக்கு நன்றி சொன்ன ஒரு வீடியோதான் இப்போது வைரலாகி வருகின்றது. இதோ அவர் கூறியது:
ஒரு கோடிக்கு சமம்: கமல், ராஜா, நீ இவ்வளவு தூரம் என்னை பத்தி புகழ்ந்து பேசுற. நீ புகழ்வதற்காக பொறந்தியோ? இல்ல எனக்கு முன்னாடி எதாவது சொல்லனும்ங்கிறதுக்காக சொன்னியோ? அத பத்தி எனக்கு கவலை இல்லை. நடிகர்களுக்கு வாழ்த்துதான் எப்பொழுதுமே முக்கியமான சமாச்சாரம். யாராவது வாழ்த்துறாங்கனா அத கேட்டுட்டுதான்பா நான்லாம் உயிரோட இருக்கேன். அது ஒரு டானிக் மாதிரி.
கலைஞர்களுக்கு வாழ்த்துறது என்பது இன்னும் அவர்களை ஊக்குவிக்க போடும் ஒரு உரம் மாதிரி. அது பெரியவர்களாக இருந்தாலும் சரி சிறியவர்களாக இருந்தாலும் சரி. நீ இவ்வளவு தூரம் பாராட்டுனீயே. எப்படி நன்றி சொல்லப் போறேன்? கோடி கோடியா கொட்டிக் கொடுத்தாலும் அதில் ஒரு பிரயோஜனம் இல்லை.கலைஞர்களின் கலையை பார்த்து இது நல்லா இருக்குனு யார் ஒரு சொட்டு கண்ணீர் விடுகிறானோ அது ஒரு கோடி கொடுக்கிறதுக்கு சமம்.
உன்னுடைய ஒவ்வொரு வார்த்தையும் எனக்கு ஒரு கோடி கொடுத்த மாதிரி நினைச்சிக்கிறேன்பா. ரொம்ப சந்தோஷம் என சிவாஜி கமலிடம் கூறியிருக்கிறார். இதற்கு பதிலாக கமல் ‘ நான் உங்ககிட்ட பல கோடி சம்பாதிச்சிருக்கேனு இப்போ நான் உணர்கிறேன்’ என சொல்லி கமலும் சந்தோஷப்பட்டார்.