கட்டுனா இப்படி ஒரு பொண்ணு!. சுந்தர்.சி போட்ட சபதம்!.. அட அது நடந்துடுச்சே!....

by Murugan |   ( Updated:2025-01-16 04:31:15  )
sundar c
X

Sundar C: மணிவண்ணனிடம் உதவியாளராக வேலை செய்து சினிமாவை கற்றுக்கொண்டவர் சுந்தர் சி. முறைமாமன் திரைப்படம் மூலம் இயக்குனராக அறிமுகமானார். காதல், குடும்ப செண்டிமெண்ட், காமெடி கலந்த கலவையாக குடும்பத்துடன் எல்லோருக்கும் பார்க்கும் படி திரைப்படம் எடுப்பது இவரின் ஸ்டைல்.

காமெடி திரைப்படம்: கார்த்திக், கவுண்டமணி, மணிவண்ணன், ரம்பாவை வைத்து அவர் இயக்கிய உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் மாபெரும் வெற்றியை பெற்றது. இந்த படத்தில் இடம் பெற்றிருந்த காமெடி காட்சிகள் இப்போதும் பலராலும் ரசிக்கப்படுகிறது. சுந்தர் சி படம் என்றாலே நம்பி போய் சிரித்துவிட்டு வரலாம் என்கிற இமேஜை அப்படம் உருவாக்கியது.


உள்ளத்தை அள்ளித்தா: இந்த படத்தின் வெற்றிதான் ரம்பா முன்னணி நடிகையாவதற்கும், கார்த்திக் 2வது ரவுண்டு வருவதற்கும் உதவியாக இருந்தது. 1958ம் வருடம் சிவாஜி - சந்திரபாபு நடித்து வெளியான சபாஷ் மீனா படத்தைத்தான் கொஞ்சம் மாற்றி உள்ளத்தை அள்ளித்தா படமாக எடுத்தார் சுந்தர்.சி ஏற்கனவே வெற்றி பெற்ற படங்களை காப்பி அடிப்பது என்பதை சுந்தர் சி பல வருடங்களாக செய்து வருகிறார்.

ரஜினியை வைத்து அருணாச்சலம், கமலை வைத்து அன்பே சிவம் ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இதில் அன்பே சிவம் திரைப்படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கிய படமாக அமைந்தது. ஒரு கட்டத்தில் அவரே ஹீரோவாக நடிக்க துவங்கினார். இதில், தலைநகரம், அரண்மனை, அரண்மனை 2, அரண்மனை 3 ஆகியவை அவருக்கு வெற்றிப்படங்களாக அமைந்தது.


மதகஜ ராஜா: இப்போது அரண்மனை 4 படத்தை இயக்கி நடித்து வருகிறார். அதோடு, 12 வருடங்களுக்கு விஷால், சந்தானம், வரலட்சுமி, அஞ்சலி ஆகியோரை வைத்து அவர் இயக்கிய மத கஜ ராஜா படம் இப்போது பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்திருக்கிறது. பொங்கலுக்கு வெளியான படங்களில் இதுவே அதிக வசூலை பெறும் என கணிக்கப்படுகிறது.

முதல் படமான முறை மாமன் படத்தை இயக்கும்போதே குஷ்புவிடம் காதலை சொல்லி அவரை திருமணமும் செய்து கொண்டார். இவர்களுக்கு 2 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், ஊடகம் ஒன்றில் பேசிய சுந்தர்.சி ‘குஷ்புவின் முதல் படம் வருஷம் 16ரிலீஸ் ஆனபோது நான் கோவையில் வேலை இல்லாமல் சுற்றிக்கொண்டிருந்தேன். அப்போது அந்த படத்தை பார்த்துவிட்டு என் நண்பனிடம் ‘கல்யாணம் பண்ணா இப்படி ஒரு பொண்ணதான் கட்டுவேன்’ என சொன்னேன். பல வருடம் கழித்து அதுவும் நடந்துவிட்டது’ என சொல்லியிருக்கிறார்.

Next Story