சூர்யா படத்துக்கு காப்பி ரைட்ஸ் கொடுக்க மறுத்த தயாரிப்பாளர்.. கோபத்தில் ஃபைனான்சியர் செய்த வேலை!

சூர்யாவுக்கு ஹிட் கொடுத்த படம்: சூர்யாவுக்கு ஒரு பிரேக் த்ரூ படமாக அமைந்தது உன்னை நினைத்து திரைப்படம். விக்ரமன் இயக்கத்தில் சூர்யா லைலா சினேகா போன்றோர் நடித்து மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தப் படம்தான் உன்னை நினைத்து. இந்தப் படத்தை லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. பேமிலி ஆடியன்ஸ் கொண்டாடிய படமாகவும் அமைந்தது. விக்ரமன் படம் என்றாலே குடும்பங்கள் கொண்டாடும் படமாகத்தான் இருக்கும்.
விஜய் நடிக்க இருந்த படம்: உன்னை நினைத்து படத்தை பொறுத்தவரைக்கும் சூர்யாவுக்கு முன் முதலில் விஜய் நடித்தார். அவரை வைத்து சில காட்சிகளும் படமாக்கினார்கள். ஆனால் இடையில் சில பிரச்சினையால் விஜய் இந்தப் படத்தில் இருந்து விலகிக் கொண்டார். விஜய் லைலா இருக்கும் புகைப்படம் கூட இப்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. அதன் பிறகுதான் சூர்யா இந்தப் படத்திற்குள் நுழைந்தார்.
காப்பி ரைட்ஸ்: இந்த நிலையில் விக்ரமன் உன்னை நினைத்து படத்தின் காப்பி ரைட்ஸை வாங்க ஒரு நிறுவனம ஆர்வம் காட்டியதாகவும் ஆனால் தயாரிப்பு நிறுவனம் அதற்கு மறுத்துவிட்டதாகவும் அதனால் ஏற்பட்ட பின்விளைவுகள் என்ன என்பதை பற்றி ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதனால் தயாரிப்பு நிறுவனத்திடம் சேலத்தை சேர்ந்த ஒருவர் உன்னை நினைத்து படத்தின் காப்பி ரைட்ஸை கேட்டாராம்.
கன்னடத்தில் வெளியான உன்னை நினைத்து: அவர் ஒரு ஃபைனான்சியராம். கன்னடத்தில் ஃபைனான்சியராக இருக்கிறாராம். ஆனால் உன்னை நினைத்து படத்தின் காப்பி ரைட்ஸை தயாரிப்பு நிறுவனம் கொடுக்க மறுத்துவிட்டதாம். அப்போது ஏற்பட்ட பேச்சு வார்த்தையில் சில கலவரங்களும் நடந்ததாம். அதனால் கோபத்தில் அந்த ஃபைனான்சியர் ‘ நான் என்ன செய்ய போகிறேன் பாருங்க’ என சொல்லி விட்டு சென்றுவிட்டாராம்.
அதன் பிறகு உன்னை நினைத்து படத்தை அப்படியே கன்னடத்தில் அந்த ஃபைனான்சியர் எடுத்து ரிலீஸ் செய்துவிட்டாராம். இதை அறிந்த ஒரு சிலர் விக்ரமனிடம் விஷயத்தை சொல்லியிருக்கிறார்கள். இதை லட்சுமி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்திடம் விக்ரமன் சொல்ல அவர்கள் இதை கண்டுகொள்ளவே இல்லையாம். உடனே விக்ரமன் பெங்களூர் சென்று அந்த படத்தை பார்த்திருக்கிறார். முதல் பாதி ஏதோ எடுத்து வைக்க இரண்டாம் பாதி முழுக்க உன்னை நினைத்து படத்தை அப்படியே காப்பி செய்து எடுத்து வைத்திருந்தார்களாம்.

புகார் செய்த விக்ரமன்: உடனே பெங்களூரில் இருக்கும் தயாரிப்பு சங்கத்திடமும் சென்னையில் இருக்கும் தயாரிப்பு சங்கத்திடமும் இதை பற்றி விக்ரமன் புகார் செய்தாராம். அதன் பிறகு ஒரு சொற்ப தொகையை கொடுத்து இந்த பிரச்சினையை சரி செய்தாராம் அந்த ஃபைனான்சியர். இதற்கு முதலிலேயே காப்பி ரைட்ஸ் கேட்கும் போதே கொடுத்திருந்தால் பெரிய தொகை கிடைத்திருக்கும் என விக்ரமன் அந்த பேட்டியில் கூறினார்.