2001ம் ஆண்டில் வெளியான டாப் ஹிட் படங்களின் லிஸ்ட்...

by Cine Reporter |
2001ம் ஆண்டில் வெளியான டாப் ஹிட் படங்களின் லிஸ்ட்...
X

கடந்த 2001ம் ஆண்டு தமிழ் திரையுலகின் பொற்காலம் என்றே சொல்லலாம். கமல்ஹாசன், விஜயகாந்த், விஜ்ய், அஜித் என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களும் ஒரே சமயங்களில் வெளியிடப்பட்டு வந்தன. இது சினிமா ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது.

2001ம் ஆண்டு கிட்டத்தட்ட 74 படங்கள் வெளியாகின. அதில் பெரிய வெற்றிபெற்ற படங்களின் லிஸ்டை மட்டும் இங்கே பார்க்கலாம்.

வாஞ்சிநாதன்:



2001 பொங்கல் வெளியீடாக வந்தது விஜயகாந்த் நடிப்பில் மலையாள இயக்குனர் ஜாஜி கைலாஷ் இஅய்க்கத்தில் வெளியான படம் வாஞ்சிநாதன். ரம்யா கிருஷ்ணன்,சாக்ஷி நாயகிகளாக நடித்திருந்தன. கார்த்திக் ராஜா இசையமைத்த இந்த படத்தை ரோஜா கம்பைன்ஸ் தயாரித்திருந்தது. அந்த கலகட்டத்தில் விஜய்காந்த் தொடர்ந்து வெற்றிப்படங்களாக கொடுத்து வந்தார். கண்ணுபட போகுதையா, வானத்தை போல, வல்லரசு வெற்றியை அடுத்து இந்த படமும் வெற்றி பெற்ற்து. இதற்கு முக்கிய காரணம் இப்படத்தின் பரபர திரைக்கததான் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரண்ட்ஸ்:


அதே பொங்கல் வெளியீடாக வந்த படம்தான் பிரண்ட்ஸ். விஜய், சூர்யா, தேவயாணி, விஜயலட்சுமி மற்றும் வடிவேலு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். மலையாள இயக்குனர் சித்திக் இயக்க, இளையராஜா இசையமைத்திருந்தார். முழுக்க முழுக்க காமெடியை மையமாக வைத்து வெளீவந்த இந்த படம் பெரிய ஹிட் அடித்தது.

தீனா:



அஜித் மற்றும் லைலா நடிப்பில் வெளியான படம் தீனா. முருகதாஸ் இயக்கிய இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருந்தார். இப்படம் வெளிவரும் முன்பே பாடல்கள் பெரிய ஹிட் அடித்திருந்தது. பின்னர் படமும் நல்ல வெற்றியி பெற்றது. இப்பததின் மூலம்தான் அஜித் தல என்று அழைக்கப்படார் என்பது குறிப்பிடத்தக்கது.

நந்தா:


சேது படத்திற்கு பின் பாலா இயக்கத்தில் வெளியான் இரண்டாவ்து படம் நந்தா. முதலில் அஜித் நடிப்பதாக இருந்தது. ஆனால் சில காரணங்களால் அவ்ர் விலகிவிடவே சூர்யா நடித்திருந்தார். யுவன் சங்கர் ராஜா இசையமைய்யி வெளியான இந்த படம் சூர்யாவிற்கு திருப்புமுனையாக அமைந்தது. மற்றும் ராஜ்கிரண் நடிப்பும் படத்திற்கு பெரும் பலமாக அமைந்தது.

ஆனந்தம்:


மம்முட்டி, முரளி மற்றும் அப்பாஸ் நடிப்பில் வெளியான படம் ஆனந்தம். சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்த இந்த படத்தினை லிங்குசாமி இயக்கியிருந்தார். இது அவருக்கு முதல் படம். விதயாசாகர் இசையமைத்திருந்த் இந்த படம்பெரிய ஹிட் அடித்தது. பாடல்கள் கூட் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

இது மட்டும்மலாமல் விக்ரம் நடித்த தில், காசி, விஜய்காந்த் நடித்த தவசி,அஜித நடித்த சிட்டிசன் மற்றும் மாதவன் நடித்த மின்னலே போன்ற படங்களும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றன.

2001ம் ஆண்டு ரஜினி நடிப்பில் எந்த படமும் வரவில்லை. கமல் நடிப்பில் பயங்கர எதிர்பார்ப்பில் வெளிவந்த ஆளவந்தான் தோல்வியை தழுவியது. அந்த ஆண்டு விஜய் ,அஜித் மற்றும் விஜயகாந்த் நடித்து வெளிவந்த அனைத்து படங்கள் ஹிட் அடிததன் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story