அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க ஆசைப்பட்ட விஜய்.. இன்னொரு மதகஜராஜாவா இருக்குமே

by Rohini |
vijay
X

விஜய் அரசியல்: இன்று அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் விஜய். சமீபத்தில் பரந்தூர் சென்று அங்கு போராடும் மக்களுக்கு ஆதரவாக சில விஷயங்களை பேசி அவர்களை சந்தித்துவிட்டு வந்தார். அதுவரை வெறும் வொர்க் ஹோம் அரசியலைத்தான் விஜய் பார்த்து வருகிறார் என்று விமர்சித்தவர்களின் வாயை இதன் மூலம் அடைத்திருக்கிறார். கட்சித் தொடங்கி மா நாட்டையும் நடத்தி அவர் கலந்து கொண்ட முதல் பொது பிரச்சினைதான் இந்த பரந்தூர் மக்கள் போராட்டம்.

வாயடைக்க வைத்த விஜய்: களத்திற்கு வரணும் விஜய் என்று பலர் விமர்சித்தார்கள். அதற்கேற்ப சரியான களத்தில் இறங்கினார். பரந்தூரிலும் மாநில அரசையும் மத்திய அரசையும் தாறுமாறாக சாடினார் விஜய். ஆனால் சினிமாவில் விஜய் என்பவர் மிகவும் சாதுவானவர். அதிகம் யாரிடமும் பேசமாட்டார் என்ற ஒரு கருத்துதான் பரவலாக இருந்தது. ஆனால் மாநாட்டில் அதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்தார்.

தளபதி 70: அதையும் தாண்டி பரந்தூரில் பேசிய பேச்சும் ஆச்சரியமாக இருந்தது. இந்த நிலையில் விஜய் தற்போது எச் வினோத் இயக்கத்தில் அவருடைய 69வது படத்தில் நடித்து வருகிறார். இதுதான் அவருடைய கடைசி படமாக இருக்கும் என சொல்லப்பட்டது. ஆனால் நேற்று வெளியான தகவலின் படி விஜய் அடுத்தும் ஒரு படத்தில் நடிக்க வாய்ப்பிருப்பதாக வேறு சில தகவலும் வெளியாகியிருக்கிறது.

அந்தப் படத்தின் அவருக்கு வரும் மொத்த சம்பளத்தையும் நலிந்த கலைஞர்களுக்காக கொடுக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது எந்தளவுக்கு உண்மை என தெரியவில்லை. ஆனால் இந்த மாதிரியான செய்திகள் பரவிக் கொண்டு வருகின்றது. இந்த நிலையில் இயக்குனர் பி. வாசு விஜயை பற்றி ஒரு தகவலை ஒரு மேடையில் சமீபத்தில் பேசியிருக்கிறார். பி.வாசு இயக்கத்தில் சத்யராஜ், குஷ்பூ, மனோரமா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் நடிகன்.


இந்த படம் முழுக்க முழுக்க நகைச்சுவை திரைப்படமாகவே அமைந்து ஒட்டுமொத்த ரசிகர்களின் வரவேற்பை பெற்ற திரைப்படம் .இந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் நடிக்க ஆசைப்பட்டதாக வாசு கூறினார். விஜயிடம் ஒரு படம் சம்பந்தமாக பேசப் போயிருந்தாராம் வாசு. அப்போது நடிகன் திரைப்படத்தை மீண்டும் எடுங்கள் . அதில் நான் நடிக்க ஆசைப்படுகிறேன் என விஜய் கேட்டாராம். இப்போது மதகஜராஜா திரைப்படத்தை எப்படி கொண்டாடுகிறோமோ அதை போல ஒரு காமெடி திரைப்படம் தான் நடிகன். இந்த நேரத்தில் அப்படி ஒரு படம் வெளியானால் கண்டிப்பாக வரவேற்பை பெறும்.

Next Story