மரத்துலயே மூன்று நாள்கள் தங்கியிருந்த கேப்டன்.. டெடிகேஷனு தெரியும்.. அதுக்கு இப்படியா?

by Rohini |
captain
X

captain

விஜயகாந்த்:

தமிழ் சினிமாவில் ஒரு உயர்ந்த மனிதனாக வாழ்ந்து மறைந்தவர் கேப்டன் விஜயகாந்த். இன்று அவருடைய முதலாமாண்டு நினைவஞ்சலி கேப்டன் மண்டபம் அமைந்த நினைவிடத்தில் நடைபெற்று வருகிறது. தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான மக்கள் கூட்டம் கூட்டமாக வந்து அவருக்கு மரியாதை செலுத்தி விட்டு செல்கின்றனர். வழக்கம் போல வந்த அனைவருக்கும் அன்னதானமும் வழங்கப்பட்டு வருகிறது.

விஜயகாந்த் என்றாலே பசியோடு வந்தவர்களுக்கு வயிறார சாப்பாடு போடும் அவருடைய ஈகை கொணம் தான் நியாபகத்துக்கு வரும். சமத்துவ உணவு என்பதை கொண்டு வந்தவர்தான் விஜயகாந்த். அதை பின்பற்றித்தான் இன்று அவர் இல்லை என்றாலும் அவர் கொண்ட அந்த ஈகை குணத்தை அவர் குடும்பமும் பின்பற்றி வருகிறார்கள். எங்கள் தலைமுறை இருக்கும் வரைக்கும் இந்த அன்னதானம் தொடரும் என பிரேமலதா விஜயகாந்த் சமீபத்தில் கூறியிருந்தார்.

அவர் எடுத்த ரிஸ்க்:

விஜயகாந்த் சினிமாவிற்காக ஆற்றிய காரியங்கள் ஏராளம். பல வகைகளில் கஷ்டப்பட்டு பணம் போட்டு படம் எடுக்கும் தயாரிப்பாளர்களுக்கு தன்னால் எந்தவித இடையூறும் வந்துவிடக் கூடாது என தான் கஷ்டப்பட்டாலும் பரவாயில்லை. படத்தை சீக்கிரம் முடித்துவிட வேண்டும் என ஒவ்வொரு படத்திற்காகவும் விஜயகாந்த் மேற்கொள்ளும் ரிஸ்க் ஏராளம். அந்த வகையில் கஜேந்திரா படத்தில் அவர் எடுத்த ரிஸ்க் பெரியது.

கஜேந்திரா படத்தின் ஒரு காட்சியில் விஜயகாந்த் ஒரு மரத்தில் இருந்து தலைகீழாக கயிற்றில் தொங்கியபடி சண்டை போடுவார். அந்த காட்சியை படமாக்கும் போது ஒவ்வொரு ஷாட் முடிந்ததும் விஜயகாந்தை கீழே இறக்கி மீண்டும் கயிற்றில் தொங்கவிட்டு எடுக்க வேண்டியிருந்ததாம். இப்படியே எடுத்து எப்பொழுதுதான் முடிப்பீர்கள் என நினைத்த விஜயகாந்த் மரத்திலேயே இருந்து கொண்டாராம்.

அந்த காட்சி மூன்று நாள்கள் படமாக்கப்பட அந்த மூன்று நாள்கள் விஜயகாந்த் மரத்திலேயே தங்கி வெறும் பழரசங்களையே சாப்பிட்டுக் கொண்டு அந்த காட்சியை முடித்துக் கொடுத்தாராம். இல்லையென்றால் ஒவ்வொரு முறையும் அவரை இறக்கி ஏற்றி ஏற்றி காட்சியை படமாக்கியிருந்தால் இன்னும் நாள்கள் நீழும். அது தயாரிப்பாளருக்குத்தான் கஷ்டம் என நினைத்து இந்தளவு ரிஸ்க் எடுத்ததாக ஒரு செய்தி இருக்கிறது.

Next Story