விஜயகாந்திடமே வாலாட்டிய இயக்குனர்... கேப்டன் சும்மா விடுவாரா? அப்புறம் நடந்ததைப் பாருங்க..
தலைப்பைப் பார்த்ததும் என்னது கேப்டன் விஜயகாந்திடமே சேட்டையான்னு நமக்கு ஆச்சரியமாக இருக்கும். அது உண்மைதான். நடந்த சம்பவத்தை பிரபல தயாரிப்பாளர் பாலாஜி பிரபு வேடிக்கையாக இப்படி சொல்கிறார்.
மறுமலர்ச்சி படத்தை இயக்கியவர் பாரதி. இவரிடம் விஜயகாந்த் கதை இருந்தா சொல்லுங்கன்னு கேட்குறாரு. அவரு கதையோட லைன் சொல்றாரு. அது விஜயகாந்துக்குப் பிடிச்சிடுது. அதுதான் கள்ளழகர். அப்போ விஜயகாந்த், நான் அடுத்த படம் ரோஜா கம்பைன்ஸ் காஜா மொய்தீனுக்கு டேட் கொடுத்துருக்கேன்.
அவங்கக் கிட்ட போய் கதை சொல்லுங்கன்னு சொல்றாரு விஜயகாந்த். அப்போ காஜாமொய்தீனுக்கிட்ட போய் பாரதி கதை சொல்லப் போறாரு. காஜா என்ன சொல்றாருன்னா பாரதிகண்ணம்மாவை ஹென்றிக்குப் பண்ணினார் சேரன். அது சூப்பரா ஓடிக்கிட்டு இருக்கு. அதுக்கு அடுத்த படம் பொற்காலம் எங்களுக்குப் பண்ணிக் கொடுத்துருக்காரு.
அதே மாதிரி நீங்க பர்ஸ்ட் படம் மறுமலர்ச்சியை ஹென்றிக்குப் பண்ணிக் கொடுத்துருக்கீங்க. ரெண்டவாது படத்துக்கு சென்டிமென்டா விஜயகாந்தோட 2வது படம் பண்றதுக்கு எங்க பேனருக்கு வந்துருக்கீங்க. எவ்வளவு அட்வான்ஸ் வேணும்? சேலரி எவ்வளவுன்னு கேட்குறாரு.
அப்போ எனக்கு நான் யாருன்னே தெரியாம இருக்கும்போது எனக்கு வாய்ப்பு கொடுத்தது ஹென்றி. அவருக்குத்தான் 2வது படம் பண்ணுவேன். உங்களுக்கு மூணாவது, நாலாவது படம்னா பண்றேன்னு சொல்லிட்டாரு. என்ன இப்படி விஜயகாந்தோட பெரிய வாய்ப்பை மிஸ் பண்றீங்களேன்னு சொல்லிருக்காரு.
இல்ல பரவாயில்லன்னுட்டு வந்துட்டாரு. உடனே இந்த விஷயம் விஜயகாந்த் சாருக்குப் போயிருக்கு. அவரு பாரதி நீங்க ஒண்ணும் கவலைப்படாதீங்க. நான் ஹென்றிக்கே டேட்ஸ் தாரேன். நீங்க டைரக்ட் பண்ணுங்கன்னு சொல்லிட்டாரு. அப்படி பண்ணின படம்தான் கள்ளழகர். அது அருமையான ஸ்கிரிப்ட். சில காரணங்களால் அது சுமாரா போனது.
இந்த இரண்டு படத்துக்கும் கேமராமேன் தங்கர்பச்சான்தான். கள்ளழகர் படத்துக்குப் பாடல் எடுக்கறதுக்கு டெல்லி, குலுமனாலி உள்பட பல இடங்களில் டீம் போயிருக்கு. டெல்லியில ஒரு ஸ்டேடியத்துல தங்கறதுக்கு ரூம் எடுத்துக் கொடுத்துருக்காங்க. அங்க தங்கர்பச்சான் கூட இருக்குறவங்கக் கிட்ட பேசிக்கிட்டு இருக்காரு. அப்போ விஜயகாந்த் மேல உள்ள ரூம்ல இருந்துருக்காரு. தங்கர்பச்சான் சொல்றாரு.
'இந்த தமிழ் இன்டஸ்ட்ரில தான் 60 வயசுக்கு மேல ஹீரோவைப் போட்டுப் படம் எடுக்குறாங்க. இதெல்லாம் எங்கேயுமே நடக்காது. இவங்க எல்லாம் ஹீரோன்னா என்ன ஒர்க் பண்றது? மூடே வரமாட்டேங்குது'ன்னு சொன்னார். அது விஜயகாந்துக்குக் கேட்டுருக்கு.
அப்போ விஜயகாந்துக்கிட்ட ஒருவர் இதுபற்றி கேட்க 'பொறு பொறு சொல்றேன்'னுட்டாரு. அப்புறம் இன்னொரு நாள் குலுமனாலில சூட்டிங். அங்க ஒரு இடத்துல தங்குனாங்க. அது ஒரு கண்ணாடி ரூம். விஜயகாந்த், டைரக்டருக்கு ஒரு ரூம். தங்கர்பச்சானுக்கு ஒரு ரூம்.
நைட்ல தங்கர்பச்சான் ரூமுல கதவு தட்டுற சத்தம் கேட்க... யாருப்பா அதுன்னு கேட்டுருக்காரு. இவங்க எல்லாரும் நாலஞ்சுபேர் சேர்ந்து பெரிய போர்வைக்குள்ள இருந்துக்கிட்டு பேய் மாதிரி சிரிச்சிருக்காங்க... அப்படி ரூமைச் சுத்தி சுத்தி வந்துருக்காங்க. 'கதவைத் திற... கதவைத்திற'ன்னு கத்திருக்காங்க.
இவரு பயந்து போய் நான் திறக்க மாட்டேன்னுக்கிட்டே இருந்துட்டாராம். 2 மணி நேரமா அப்படியே இருந்துருக்காரு. கரண்டை வேற ஆப் பண்ணிட்டாங்க. மறுநாள் சூட்டிங்ஸ்பாட்ல என்ன தங்கர் நைட் நல்ல தூக்கமான்னு விஜயகாந்த் சார் கேட்டுருக்காரு. சார் நான் ஏதோ தெரியாம ஒரு வார்த்தை விட்டுட்டேன்.
அதை வச்சி அடிக்காதீங்கன்னு சொல்லிருக்காரு. போங்க போங்க எனக்கு ஈக்குவலான ஆளா நீங்கள்லாம்னு அனுப்பினாராம். விஜயகாந்த் சார் எப்படின்னா கோபமா யாராவது ஒருத்தர் பண்ணினா கூட அதைப் பெரிசா எடுத்துக்க மாட்டாரு. இந்த மாதிரி வேடிக்கையா ஏதாவது பண்ணிட்டுப் போயிடுவாரு. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தங்கர்பச்சான் ஆரம்பத்தில் ஒளிப்பதிவாளராகத் தன்னை ஒளி ஓவியர் என்று அடையாளப்படுத்திக் கொண்டார். பின்னர் அழகி, சொல்ல மறந்த கதை, சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி ஆகிய படங்களையும் இயக்கி இயக்குனர் ஆகி விட்டார்.