எந்த நடிகரும் பண்ணாத விஷயங்களை துணிந்து செய்த விஜயகாந்த்!.. கேப்டன்தான் கெத்து!..

by Murugan |
oomai vizhigal
X

Vijayakanth: ரஜினி, கமல், மோகன் போன்ற முன்னணி நடிகர்கள் தமிழ் சினிமாவில் கலக்கிக்கொண்டிருந்த போது நம்பிக்கையுடன் புதுமுக நடிகராக சினிமாவில் நுழைந்தவர்தான் விஜயகாந்த். துவக்கத்தில் இவரை தமிழ் சினிமா கண்டுகொள்ளவில்லை என்றாலும் ஒருகட்டத்தில் தனக்கென ரசிகர்களை உருவாக்கி வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார்.

சினிமா நடிகர்களிலேயே அதிக துணிச்சலோடு பல விஷயங்களை செய்தது விஜயகாந்த் என்பது பலருக்கும் தெரியாது. தன் மீது இருந்த நம்பிக்கை, நல்லதே நடக்கும், மற்றவர்களுக்கு உதவ வேண்டும் போன்ற எண்ணம் போன்றவையே விஜயகாந்தை பல புது விஷயங்களை செய்ய வைத்தது.


விஜயகாந்தை பற்றி எப்போதும் கிண்டலாகவும், நக்கலாகவும் பேசுபவர்களுக்கு திரைத்துறையில் அவர் என்னவெல்லாம் செய்தார் என்பது தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அப்படி விஜயகாந்த் செய்த சில முக்கிய விஷயங்கள் பற்றி இங்கு பார்ப்போம். அரவிந்த்ராஜ் இயக்கத்தில் 1986ம் வருடம் வெளியாகி ஹிட் அடித்த படம்தான் ஊமை விழிகள்.

இந்த படம் ரசிகர்களுக்கு திரில்லரான புது அனுபவத்தை கொடுத்தது. நடிப்பு கல்லூரி மாணவர்கள் சினிமாவில் நுழைந்த நேரம் அது. விஜயகாந்த் அப்போது உச்சத்தில் இருந்தார். பல படங்களில் நடித்து கொண்டிருந்தார். ஆனாலும், அவர்களை நம்பி அந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்தார். அப்போது விஜயகாந்துக்கு 34 வயது. ஆனால், வயதான போலீஸ் அதிகாரி போல நடித்தார். இதைத்தான் பல வருடங்கள் கழித்து சூது கவ்வும் படத்தில் விஜய் சேதுபதி செய்தார்.


மணிரத்னம் கதை, வசனம் எழுதி சுபாஷ் எழுதி இயக்கிய படம்தான் சத்ரியன். இந்த படத்தில் மனைவியை இழந்து 2 குழந்தைகளுக்கு தந்தையாக விஜயகாந்த் நடித்திருப்பார். விஜயகாந்த் அப்படி நடித்தபோது ரஜினி, கமல், சத்தியராஜ் போன்ற சக நடிகர்கள் கதாநாயகிகளுடன் சிங்கிளாக டூயட் பாடிக்கொண்டிருந்தார்கள்.

சரத்குமாரை ஹீரோவாக போட்டு விஜயகாந்த் தயாரித்த படம்தான் தாய் மொழி. அப்போது வருடத்திற்கு 4 படங்கள் நடிக்கும் பிஸியான நடிகராக விஜயகாந்த் இருந்தார். ஆனாலும், அந்த படத்தில் 15 நிமிடம் வரும் ஒரு சின்ன வேடத்திலும் விஜயகாந்த் நடித்திருந்தார். ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய வைதேகி காத்திருந்தாள் படத்தில் எந்த ஹீரோயிசமும் காட்டாமல் விஜயகாந்த் நடித்திருந்தார்.


அதேபோல், நானே ராஜா நானே மந்திரி படத்தில் படிப்பறிவில்லாத, எந்த பக்குவமும் இல்லாத ஒரு கிராமத்து முரடனாக நடித்திருந்தார். இதுபோல இன்னும் விஜயகாந்தை பற்றி சொல்லிக்கொண்டே போகலாம். பாக்ஸ் ஆபிஸில் கிங்காக இருக்கும் போதுதான் இந்த எல்லா கதாபாத்திரங்களிலும் விஜயகாந்த் நடித்தார் என்பதில் நினைவில் கொள்ள வேண்டும்.

Next Story