வேறலெவல் வெறித்தனம்!. சும்மா சரவெடி!. தெறிக்க விடும் கோட் டிரெய்லர் வீடியோ!..
Goat trailer: வெங்கட்பிரபுவின் இயக்கத்தில் விஜய் நடித்து பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் கோட். லியோ படத்திற்கு பின் விஜய் நடித்திருக்கும் திரைப்படம் இது. இந்த படத்தில் அப்பா - மகன் என இரட்டை வேடங்களில் விஜய் நடித்திருக்கிறார். அப்பா விஜய்க்கு சினேகாவும், மகன் விஜய்க்கு மீனாட்சி சவுத்ரியும் ஜோடியாக நடித்திருக்கிறார்கள்.
பல வருடங்களுக்கு பின் விஜயின் படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். ஆனால், இதுவரை 3 பாடல்கள் வெளியானது. ஆனால், அது ரசிகர்களை கவரவில்லை. ஆனாலும், படம் வெளியானால் அது ரசிகர்களுக்கு பிடிக்கும் என நம்பிக்கையோடு சொல்லி இருக்கிறார் வெங்கட்பிரபு.
இந்த படத்தின் இளம் வயது விஜயை ஏஜிங் டெக்னாலஜி மூலம் காட்டி இருக்கிறார்கள். எனவே, இப்படம் விஜய் ரசிகர்களுக்கு விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படம் வருகிற செப்டம்பர் 5ம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் விஜயுடன் பிரசாந்த், பிரபுதேவா போன்றவர்கள் நடித்திருக்கிறார்கள்.
ஏற்கனவே இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. அடுத்து, டிரெய்லர் வீடியோ எப்போது வெளியாகும் என விஜய் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தார்கள். இப்போது அப்போது என கடந்த சில நாட்களாக சொல்லி வந்த நிலையில். ஒரு வழியாக கோட படத்தின் டிரெய்லர் வீடியோவை படக்குழு வெளியிட்டிருக்கிறது.
ஹாலிவுட் படங்களில் வருவது போல அசத்தலான சண்டை மற்றும் சேஸிங் காட்சிகள் இதில் இடம் பெற்றிருக்கிறது. டிரெய்லரின் முதல் காட்சியிலேயே ‘உங்களை வழிநடத்தப்போவது ஒரு புது லீடர்’ என பன்ச் சொல்கிறார் பிரசாந்த். இது அரசியல் குறியீடு போல. இளம் வயது விஜயையுன் நன்றாகே காட்டி இருக்கிறார்கள்.
விஜயால் பாதிக்கப்பட்டு பின்னாளில் பழி வாங்க வரும் வில்லனாக மைக் மோகன் வருகிறார். டிரெய்லர் வீடியோவை பார்க்கும் போது கண்டிப்பாக இந்த படம் விஜய் ரசிகர்களுக்கு திருவிழாவாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.