பணம் இருந்தால் எல்லாம் முடியும்!..ரேட்டிங்கிற்காக அடிமட்டத்திற்கு இறங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி!..

விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் தரத்தை உயரத்தை விஜய் டிவி நிறுவனம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. போட்டியாளர்களை தேர்வு செய்வதிலும் மிகவும் மெனக்கிடுகிறது. உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதாலேயே மக்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது. அதற்காகவே கமலுக்கு மிகப்பெரும் தொகையை கொடுத்து தொடர்ந்து நிகழ்ச்சியில் தக்கவைத்து வருகின்றது விஜய் டிவி நிறுவனம். மேலும் தற்போது பிக்பாஸ் சீசன் 6வது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கின்றது. […]

By :  Rohini
Update: 2022-10-27 01:28 GMT

விஜய் டிவியில் பரபரப்பாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சி பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் தரத்தை உயரத்தை விஜய் டிவி நிறுவனம் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. போட்டியாளர்களை தேர்வு செய்வதிலும் மிகவும் மெனக்கிடுகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்குவதாலேயே மக்கள் மத்தியில் பெருத்த எதிர்பார்ப்பு இருந்து கொண்டே இருக்கிறது. அதற்காகவே கமலுக்கு மிகப்பெரும் தொகையை கொடுத்து தொடர்ந்து நிகழ்ச்சியில் தக்கவைத்து வருகின்றது விஜய் டிவி நிறுவனம். மேலும் தற்போது பிக்பாஸ் சீசன் 6வது சீசனில் அடியெடுத்து வைத்திருக்கின்றது.

இதையும் படிங்க : நாகேஷின் தொழிலுக்கு வந்த பங்கம்… தெய்வமாக வந்து காப்பாற்றிய எம்.ஜி.ஆர்… ஒரு சுவாரஸ்ய சம்பவம்…

இதிலுள்ள போட்டியாளர்கள் பெரும்பாலும் தொலைக்காட்சி தொடர் நடிகர் நடிகைள், பொதுமக்களில் ஒருவர் என கலந்து கொண்டு பங்கேற்று வருகின்றனர். இந்த நிலையில் டிக்டாக் மூலம் ஏற்கெனவே மக்கள் மத்தியில் பரீட்சையமானவர் ஜிபி.முத்து. திடீரென அவரின் மகனுக்கு உடல் நிலை சரியில்லை என்று பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே போக வேண்டும் என்று அழுது புலம்பி ஆர்ப்பாட்டம் செய்து வீட்டை விட்டு வெளியேறினார். இவராலேயே பிக்பாஸ் நிகழ்ச்சியின் ரேட்டிங் உச்சத்தில் இருந்தது.

இவர் வீட்டை விட்டு வெளியேறிய பின் ரேட்டிங் சரிய தொடங்கியது.இதனால் விஜய் டிவி நிறுவனம் அவரை மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் அழைத்து வர முயற்சிகளை எடுத்து வருகிறது. அவருக்கு ஏற்கெனவே கொடுத்த தொகையை விட இரண்டு மடங்கு தொகையை கொடுத்து அவரை வரவழைக்கும் முயற்சியில் விஜய் டிவி நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

Tags:    

Similar News