புஷ்பா 2-வில் இதெல்லாம் செம ஹலைட்ஸ்!.. ரசிகர்கள் சொல்வது என்ன?!...
Pushpa 2: தெலுங்கில் மாஸான படங்களை இயக்கி வரும் சுகுமாரின் இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடித்து 3 வருடங்களுக்கு முன்பு வெளியான திரைப்படம்தான் புஷ்பா. ஆந்திராவில் நடைபெறும் சட்டவிரோத செம்மரக்கட்டை கடத்தலை செய்யும் கும்பல் பற்றிய கதை இது. தினக்கூலிகள் போல் ஏழை மக்கள் அதில் எப்படி பயன்படுத்தப்படுகிறார்கள்?..
அவர்களை பிடிக்க போலீசார் எப்படியெல்லாம் முயற்சி செய்கிறார்கள்?.. லஞ்சம் வாங்கிக்கொண்டு எப்படி அவர்களை விடுகிறார்கள்?.. செம்மரக்கட்டை கடத்தில் உள்ள ரிஸ்க் என்ன?.. அதன்பின்னால் இருக்கும் பெரிய தலைகள் யார் யார்?.. அதை சுற்றி இருக்கும் அரசியல் என எல்லாவற்றையும் இந்த படத்தில் சுகுமார் பதிவு செய்திருந்தார்.
புதுமையான கதை, அல்லு அர்ஜூனின் அலட்டான நடிப்பு, ராஷ்மிகான் கவர்ச்சி, ரசிக்கத்தக்க பாடல், அசத்தலான சண்டை காட்சிகள் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்து இப்படம் தமிழ், தெலுங்கி, ஹிந்தி என 3 மொழிகளிலும் ஹிட் அடித்து வசூலை அள்ளியது. எனவே, புஷ்பா 2-வை அதிக செலவு செய்து இன்னும் சிறப்பாக எடுத்திருக்கிறார்கள்.
புஷ்பா 2 படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு ரசிகர்களிடம் அதிக எதிர்பார்ப்பும் நிலவியது. எனவே, டிக்கெட் முன்பதிவிலேயே 100 கோடியை இப்படம் வசூல் செய்தது. புஷ்பா முதல் பாகத்தில் இறுதியில் வந்த பஹத் பாசில் புஷ்பா 2 வில் படம் முழுக்க வருகிறார். அவருக்கும், அல்லு அர்ஜுனுக்கும் இடையே நடக்கும் மோதல்கள், அல்லு அர்ஜூன் பேசும் வசனங்கள், தாறுமாறான சண்டை காட்சிகள் எல்லாம் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.
புஷ்பா 2 படத்தை அல்லு அர்ஜூனின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். மாஸ் இண்டர்வெல் காட்சி, முதலமைச்சர் புகைப்பட காட்சி, கிச்சனில் ராஷ்மிகாவுடன் அல்லு அர்ஜூன் ரொமான்ஸ் செய்யும் காட்சி, பீலிங் பாடல், அல்லு அர்ஜூன், பஹத் பாசில் இருவருக்கும் இடையே இருக்கும் கிளாஸ், குறிப்பாக வொய்ல்ட் ஃபயர் மாஸ் காட்சி, ஜாதாரா காட்சியில் பெண் வேடத்தில் வந்து அல்லு அர்ஜூன் பாடும் பாடல், நடனம் மற்றும் அங்கு நடக்கும் சண்டை காட்சி, ஸ்ரீலீலா நடனமாடும் கிஸ்ஸிக் பாடல், ஹைவோல்டேஜ் கிளைமேக்ஸ் ஃபைட், அடுத்த பாகத்திற்கான லீட் ஆகிய இப்படத்தின் ஹைலைட்ஸ் என ரசிகர்கள் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு வருகிறார்கள்.
இதையும் படிங்க: Pushpa2 Review: வேறலெவல் சம்பவம் பண்ணிய அல்லு அர்ஜூன்!.. புஷ்பா 2 டிவிட்டர் விமர்சனம்!…