தான் மட்டும் வளர்ந்தால் போதாது! அடுத்தவனையும் வாழ வைக்கனும் - விஜயால் ஒரே நாளில் ஓஹோனு வந்த நடிகர்
தமிழ் சினிமாவில் முன்னனி நடிகராக வலம் வரும் விஜய் தற்போது அமெரிக்காவில் இருக்கிறார். லியோ படத்தின் படப்பிடிப்பை முடித்து விட்டு தனது அடுத்த படமான தளபதி 68 படத்திற்கான வேலையில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் விஜய். அந்தப் படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிப்பதாக இருந்தது.
ஆனால் தற்போது வந்த தகவலின் படி மூன்று வேடங்களில் நடிக்க வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. இதற்காகத்தான் விஜய் அமெரிக்கா சென்றிருக்கிறார். கூடவே வெங்கட் பிரபு, ஏஜிஎஸ் அர்ச்சனா கல்பாத்தி ஆகியோரும் சென்றிருக்கின்றனர்.
இதையும் படிங்க : சேரன் பட இயக்குநரை டார் டாராக கிழித்த பயில்வான் ரங்கநாதன்!.. பதில் சொல்லமுடியாமல் வடிவேலாவே மாறிட்டாரே!..
படத்தில் இரட்டை வேடங்களில் நடிப்பதால் தத்ரூபமாக தெரியவேண்டும் என்பதற்காக ஒரு புதிய தகவல் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி படத்தை எடுக்க இருக்கிறார்களாம். அதன் காரணமாகத்தான் படக்குழு அமெரிக்காவில் முகாமிட்டிருக்கின்றனர்.
இந்த நிலையில் சில தினங்களுக்கு முன் லாஸ் ஏஞ்ஜெல்ஸில் விஜய் பிரபல ஹாலிவுட் நடிகர் டென்சல் வாஷிங்டன் நடித்த ஈக்குவலைசர் 3 படத்தின் பிரிமீயர் ஷோவை தியேட்டரில் போய் பார்த்திருக்கிறார். விஜய்க்கு மிகவும் பிடித்தமான நடிகராம் டென்சல் வாஷிங்டன்.
இதையும் படிங்க : போச்சே போச்சே.. கிரண் மட்டுமில்லை!.. கிக்கேற்றும் அந்த கில்மா நடிகையையும் கொத்தாக தூக்கிய நாகார்ஜுனா!..
அப்போது டென்சலின் நடிப்பை பார்த்து மிரண்டு போன விஜய் ஆர்வத்தில் ஒரு ரசிகராவே மாறி எழுந்து நின்று உற்சாகத்தை வெளிப்படுத்தினார். அது சம்பந்தமான புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதிலிருந்தே டென்சல் வாஷிங்டன் மிகவும் பிரபலமாகிவிட்டார்.
அதுவரை டென்சலை பற்றி தெரியாத தமிழ் ரசிகர்கள் கூட யார் அந்த டென்சன் வாஷிங்டன் என கூகுளில் தேட ஆரம்பித்துவிட்டார்களாம். கூகுளில் அதிகம் தேடப்பட்ட நடிகர் என்ற பெருமையை டென்சல் வாஷிங்டன் பெற்றிருக்கிறாராம். அதற்கு காரணம் விஜய் தான் என்று சொல்லப்படுகிறது.
இதையும் படிங்க : முதன் முறையாக ஒரு நடிகைக்கு நடனம் சொல்லிக் கொடுக்க பயந்த கலா! இவங்களுக்கா?