ரோல், கேமரா, சவுண்டு, ஆக்சன்... ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்ல இப்படித்தான் அந்த டயலாக் வந்துச்சா!..
தீபாவளிக்கு ரிலீஸாகி பட்டி தொட்டி எங்கும் பட்டையைக் கிளப்பி வரும் படம் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ஜிகர்தண்டா டபுள் எக்ஸ். இந்தப் படம் குறித்து கார்த்திக் சுப்புராஜ், ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா என்ன சொல்கிறார்கள் என்று பார்ப்போம்.
இது வந்து 70ஸ்ல நடக்குற கதை. ரஜினிகாந்த் சினிமா பீல்டுக்கு வர்றதுக்கு முன்னாடி இருந்த கதை இது. கருப்பு ஹீரோ ஏன் நடிக்க வரக்கூடாது? அதுவும் ஒரு கேங்ஸ்டர் நடிக்கும்போது அவரு இதை நினைச்சாருன்னா படம் எப்படி இருக்கும்? அவரோட லைஃப்ல ஒரு கலைஞன் வர்றானா ரெண்டு பேருக்கும் இடையில எப்படி ஒரு டச் இருக்கும்னு ஒரு சுவாரசியமா சொல்லியிருப்போம்.
இந்தக்கதையை எழுதி முடிச்ச உடனே எனக்கு டெக்னிக்கலா நல்லா வேலை செஞ்சது திரு சார். அதனால கதையை ரெடி பண்ண உடனே அவருக்கிட்டே இதுபற்றி கேட்டேன். ஸ்கிரிப்ட்ட படிச்ச உடனே ஓகே சொல்லிட்டாரு.
திரு சாருக்கு நிறைய தெரியும்கறதனால அவரு வந்து அந்த விஷயங்கள் எல்லாம் கரெக்டா பண்ணுனாரு. 70ஸ்ல உள்ள மதுரையும், மலைவாழ் மக்களோட கிராமத்தையும் காட்ட வேண்டியிருந்தது.
ஆர்ட் டைரக்டரா பாலசுப்பிரமணியம், குமார் ரங்கப்பன்னு ரெண்டு பேரு நல்லா பண்ணுனாங்க. காஸ்டியூம் டிசைனர் பிரவீன் ராஜா ரொம்ப சூப்பரா பண்ணினாரு. சந்தோஷ் சுப்பிரமணியம் மியூசிக்ல ரொம்ப நல்லா பண்ணிருக்காரு. சூப்பர் சுப்பராயனோட மகன் திலீப் சுப்பராயன் தான் இந்தப் படத்தோட ஸ்டண்ட் மாஸ்டர்.
ராகவா லாரன்ஸ் இந்தப் படத்தைப் பத்தி சொல்லும்போது மலைவாழ் மக்களுக்கு இந்த நேரத்தில தேங்கஸ் சொல்லணும். சூட்டிங் காலைல 7 மணிக்குன்னா நான் தான் கரெக்ட் டையத்துக்குப் போறேன்னு நினைச்சா, அங்க அந்த மக்கள் எல்லாரும் காலைலயே ரெடியா சூட்டிங்குக்குக் காத்துக்கிட்டு இருப்பாங்க. எஸ்.ஜே.சூர்யா சாரோட சேர்ந்து ஒர்க் பண்ணுனது ஜாலியான அனுபவம். அதையும் தாண்டி ஒரு நல்ல மனிதர் அவர். இன்னும் பல படங்கள் அவரோட சேர்ந்து பண்ண ஆசையா இருக்கு.
எஸ்.ஜே.சூர்யா சொல்கையில், ஒரு டைரக்டர் சொல்றதை மட்டும் அப்படியே சொல்லக்கூடாது. அதை மூளைக்குள்ள வாங்கி, மனதுக்குள் பிராசஸ் பண்ணி அதை நாம் ஆர்வமா வெளிப்படுத்துற விதம் தான் முக்கியம். இதுல சத்யஜித்ரேவ ரோல் மாடலா வச்சி படம் எடுக்கற இயக்குனர் வேடம். சத்யஜித்ரேவ நாம நேரில பார்த்தது இல்ல. அதனால அவர் என்ன சொல்றாருன்னா ரோல் கேமரா சவுண்டு ஆக்ஷன்குற டயலாக்... அதை மனசுக்குள்ள போட்டு பிராசஸ் பண்ணி படத்துல சொல்றப்ப மக்களுக்கு அது ஒரு புது அனுபவத்தைத் தரும்.