விஜயின் மாஸ் என்னன்னு ‘கோட்’ படம் காட்டிருச்சி!.. இவர் சொன்னா கரெக்டாதான் இருக்கும்..
Goat Movie: தமிழ் சினிமாவை இவர் ஒருவரால் மட்டும்தான் ஒரு உயர்ந்த நிலைக்கு கொண்டு போக முடியும் என்பதை கோட் திரைப்படம் மூலம் நிரூபித்து காட்டி இருக்கிறார் விஜய். ஒரு வசூல் சக்கரவர்த்தியாக கிட்டத்தட்ட பல வருடங்களாக நம்பர் ஒன் இடத்தில் இருந்து வருகிறார் விஜய்.
இவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த லியோ திரைப்படம் வசூலில் எப்பவும் போல மாஸ் காட்டினாலும் விமர்சன ரீதியாக கலவையான விமர்சனங்களை தான் பெற்றது. அதன் பிறகு எப்படியாவது ஒரு பெரிய வெற்றியை கொடுக்க வேண்டும் என்ற சூழ்நிலைக்கு தள்ளப்பட்டார் விஜய்.
இதையும் படிங்க: ஷகீலானு பேரு சொல்லவே கடுப்பா இருக்கு… ஹேமா கமிட்டி பத்தி அவங்க பேசலாமா? வெளுக்கும் பிரபலம்
கோட் திரைப்படம் வசூலிலும் சரி விமர்சனத்திலும் சரி வெற்றியைப் பெற வேண்டும் என்ற முனைப்போடு ஒட்டுமொத்த பட குழுவும் செயல்பட்டார்கள். அவர்கள் நினைத்ததையும் தாண்டி படம் நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் பிரபல சினிமா தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கோட் திரைப்படத்தை பற்றி கூறியிருக்கிறார்.
ஒரு பண்டிகை இல்லாத காலங்களில் விஜயின் இந்த கோட் திரைப்படம் 126 கோடி வசூலை பெற்றிருக்கிறது என்றால் அது சாதாரண விஷயம் அல்ல. விஜய்யால் மட்டும்தான் இந்த படம் இந்த அளவு வசூலை பெற்றிருக்கிறது. அதுவும் விஜய்க்கு இருக்கும் கிரேஸ். ரசிகர்கள் அவர் மீது வைத்திருக்கும் அன்பு. இதனால் தான் இந்த படம் இந்த அளவு வசூலை வாரி இறைத்திருக்கிறது.
இதையும் படிங்க: கோட்டில் சிவகார்த்திகேயனுக்கு அந்த டயலாக்கை போட்டதே விஜய்தானாம்… பக்கா ஸ்கெட்ச்தான்!
அதுவும் ஒரே நாளில் 126 கோடி என்பது நினைத்து கூட பார்க்க முடியாத ஒரு வசூல். பெரும் சாதனையை தான் கோட் திரைப்படம் பெற்றிருக்கிறது என தனஞ்செயன் கூறி இருக்கிறார். இதற்கு முன் விஜயின் பீஸ்ட், லியோ போன்ற திரைப்படங்கள் எல்லாம் இந்த அளவு வசூலை பெற்றிருந்தாலும் விஜயால் மட்டும் தான் இது சாத்தியப்படும் என்பதை கோட் திரைப்படம் மூலம் மீண்டும் நிரூபித்திருக்கிறார்.
விஜய் அடுத்ததாக எச் வினோத் இயக்கத்தில் அவருடைய 69 ஆவது திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார். அதை முடித்துவிட்டு மொத்தமாக சினிமாவிற்கு குட் பை சொல்கிறார். இது ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிற்கும் ஒரு லாஸ் என்றும் பலபேர் கூறி வருகிறார்கள். இந்த அளவு ஒரு உச்சத்தில் இருக்கும்போதே அரசியலில் இறங்குவது என்பதும் சாதாரண விஷயம் கிடையாது.
இதையும் படிங்க: கோட் படத்தோட வெற்றி ரகசியம் இதுதானாம்… அப்படி என்னப்பா இருக்கு படத்துல?